பெர்மாத்தாங் தொகுதியில் 790 வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் நிர்மாணிக்கத் திட்டம்

Admin

பெர்மாத்தாங் பாசிர் – பினாங்கு மாநில அரசு பெங்காலான் தம்பாங்கில் உள்ள 23 ஏக்கர் நிலப்பரப்பில் மற்றொரு வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டத்தை நிர்மாணிக்க இணக்கம் கொண்டுள்ளது.

இந்த வீடமைப்புத் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்பாடுக் காணும். முதல் கட்டத்தில், 4.6 ஏக்கர் நிலப்பரப்பில் ஐந்து அடுக்குமாடிகள் கொண்ட மூன்று பிளாக்கில் 350 வீடுகள் கட்டப்படும் (ஒரு யூனிட் வீடு ரிம42,000) ; இரண்டாம் கட்டத்தில், 18.4 ஏக்கர் நிலப்பரப்பில் 440 யூனிட் நகர வீடுகள்(townhouse) (ஒரு யூனிட் வீடு ரிம250,000) கட்ட இலக்குக்

Artist impression of the low-cost flats.
கொண்டுள்ளது. மேலும், இந்த வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மசூதி, சமூக மண்டபம் மற்றும் இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலம் என பொது வசதிகளுடன் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இது மக்கள் வீடமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மாநில அரசு கொண்டுள்ள உறுதிபாட்டைப் பறைச்சாற்றுகிறது என பெர்மாத்தாங் பாசிர் தொகுதியில் நிர்மாணிக்கப்படும் இந்த வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்ட அடிக்கல் நாட்டு விழாவை அதிகராப்பூர்வமாகத் தொடக்கி வைத்து மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் இவ்வாறு கூறினார்.

மாநில அரசு வருகின்ற 2030 ஆண்டுக்குள் பினாங்கு மக்களுக்காக 220,000 வீடுகளை அமைக்க இலக்குக் கொண்டுள்ளது.

“தற்போதைய நிலவரப்படி, பல்வேறு வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டங்களில் 138,545 யூனிட் வீடுகள் பல கட்டுமானக் கட்டங்களில் உள்ளன,” என மாநில முதல்வர் விவரித்தார்.


“மாநில அரசு 2014-ஆம் ஆண்டு முதல் வாடகை கொள்முதல் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. முன்னதாக, அதிகமான வங்கிக் கடன் விண்ணப்ப நிராகரிக்கப்பட்டதை முன்னிட்டு இத்திட்டம் செயல்பாடுக் காண்கிறது.

“வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை வாங்க முடியாத நிலையில் பலர் உள்ளனர். எனவே, இத்திட்டத்தின் மூலம் அனைவருக்கும் சொந்தமாக வீடு கிடைப்பதை உறுதி செய்ய சிறந்த வழியாகத் திகழ்கிறது,” என்றார்.

இந்நிகழ்ச்சியில், வீடமைப்பு, உள்ளாட்சி, கிராமம் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ; பெர்மாத்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இஷா; பெர்மாத்தாங் பாசிர் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது ஃபைஸ் ஃபாட்சில் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

“2030 ஆம் ஆண்டளவில் 220,000 யூனிட்களை வழங்குவதற்கான எங்கள் பினாங்கு2030 இலக்கில் 62.9 விழுக்காட்டை அடைந்துள்ளோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

“பினாங்கு வாழ் மக்களின் நலனுக்காக இதுபோன்ற வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டங்களை செயல்படுத்தும் தனியார் மேம்பாட்டு நிறுவனங்களுக்கு மாநில அரசு நன்றிக் கூற கடமைப்பட்டுள்ளது

“மாநில அரசு தொடர்ந்து வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் அமைத்து, அனைவருக்கும் குறிப்பாக முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்,” என்று ஜெக்டிப் கூறினார்.

இதற்கிடையில், பெர்மாத்தாங் பாசிர் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது ஃபைஸ் ஃபாட்சில், இத்திட்டத்தின் கீழ் உள்ளூர்வாசிகளுக்கு வீடுகள் வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என பினாங்கு மாநில வீட்டுவசதி வாரியம் (LPNPP) மூலம் மாநில அரசுக்குப் பரிந்துரைத்தார்.