இந்தியர் சங்கத்தின் இரு மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்த நிதி திரட்டுவது அவசியம் 

இந்திய சங்கத்தின் தடைப்பட்ட இரு மேம்பாட்டுத் திட்டங்கள்

ஜார்ச்டவுன் – மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் பினாங்கு இந்தியர் சங்க மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரிம200,000 தொடக்க நிதியாக வழங்க ஒப்புதல் தெரிவித்தார். 

“இச்சங்கத்தின்  முன்முயற்சியில் இந்தியர் சங்க நிர்வாக அலுவலகம்; நான்கு மாடி கட்டிடம் மற்றும் பல்நோக்கு மண்டபம் அமைக்கும் மேம்பாட்டுத் திட்டம்  கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இருப்பினும், சில தவிர்க்க முடியாத காரணத்தால்
இதில் இரண்டு திட்டங்கள் கடந்த 2016ஆம் ஆண்டு
தடைப்பட்டது.


இந்த இரண்டு திட்டங்கள் செயல்படுத்த அதிகமான நிதியுதவி தேவைப்படுவதால் மாநில அரசு இந்த ஆண்டுக்கான தொடக்க நிதியாக ரிம200,000 ஒதுக்கீடு வழங்கியுள்ளது. வருகின்ற ஆண்டுகளில் இச்சங்க முன்னெடுப்புத் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க இணக்கம் கொள்வதாக, முதல்வர் தெரிவித்தார். 

மாநில சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் வந்து இச்சங்க மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்த நிதியுதவி வழங்குமாறு கேட்டுக்கொண்டார். 

இதன் மூலம்  இச்சங்கத்தின் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்த புத்துயிர் அளிக்கப்படும். 

பொது மக்கள்,  பெருநிறுவனங்கள், அரசு சாரா இயக்கங்கள் நிதி பங்களிப்பு வழங்குவதை வரவேற்பதாகக் கூறினார். மேலும், இது இத்திட்டம் செயல்படுத்த தூண்டுகோளாக அமையும், என்றார்.

இந்திய சங்கத்தின் தடைப்பட்ட இரு மேம்பாட்டுத் திட்டங்கள்

இந்த மேம்பாட்டுத் திட்டங்கள் இந்தியர்களின் அடையாளமாகவும் எதிர்காலத்தில் சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகள் ஏற்று நடத்த வாகனம் நிறுத்தும் வசதிகள் கொண்ட ஒரு சிறந்த தளமாகவும் திகழும். 

மாநில முதல்வர் , இந்தியர் சங்க உறுப்பினர்களுடன் இணைந்து தடைப்பட்ட இரண்டு மேம்பாட்டுத் திட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டார். 

அண்மையில் பினாங்கு இந்தியர் சங்க உறுப்பினர்கள்  மரியாதை நிமித்தம் முதல்வர் அலுவகத்திற்கு வருகை அளித்து இத்திட்டங்கள்  பற்றிய நிலவரம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் புலாவ் தீக்குஸ் சட்டமன்ற உறுப்பினர் கிறிஸ் லீ சுன் கிட்,  ஆயர் ஈத்தாம் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் ஒன் வாய் ஆகியோர் கலந்து கொண்டனர். 

கடந்த 1924ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இச்சங்கத்தில் 500 உறுப்பினர்கள் இடம்பெறுகின்றனர். 

“மாநில முதல்வரின் தொடக்க நிதியுதவி இத்திட்டம் மீண்டும் செயல்படுத்த புத்துயிர் அளிக்கிறது,” என இந்தியர் சங்க மேம்பாட்டுத் திட்ட மேலாளரும் இச்சங்க உறுப்பினருமான டத்தோ குவணராஜு கூறினார். 
கூடிய விரைவில் அனைத்து தரப்பினர் ஒத்துழைப்புடன் இத்திட்டம் மீண்டும் துவக்க விழாக் காணும் என நம்பிக்கை தெரிவித்தார். 

இந்த மேம்பாட்டுத் திட்டம், குறிப்பாக இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் மையக்கல்லாக அமையும், என்றார்.