உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு அவசியம்

ஜார்ஜ்டவுன் – பினாங்கு சென்ட்ரல் கிவானிஸ் கழகத்தின் ஏற்பாட்டில் நான்காவது மனநல ஆரோக்கியம் பட்டறை பினாங்கு தேக் டோமில் அஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் கம் வோங் மற்றும் பினாங்கு எட்வெந்திஸ் மருத்துவமனை உளவியலாளர் டாக்டர் லாய்ன் வோங் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்தனர்.

“வலுவான மன அழுத்தம் மேம்பாட்டின் மூலம் நிலைப்பாடு கொண்ட இளைஞர்களை உருவாக்குதல்” என்ற கருப்பொருளில் இடம்பெற்ற இப்பட்டறையில் பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அவர்தம் துணைவியார் தான் லீன் கீ சிறப்பு வருகை மேற்கொண்டார். மேலும், இப்பட்டறையில் உளவியலாளர்கள், மனநல நிபுணர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஆலோசகர்கள் மற்றும் இளைஞர்கள் என நூற்றுகணக்கானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இப்பட்டறையில் சிறப்புரை வழங்கிய கிவானிஸ் கழகத்தின் தலைவர் டத்தோ ஶ்ரீ நொங் சியூ ஹாய் தமதுரையில் மன ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதோடு, மனநல நோயின் அறிகுறியை அகற்றி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துவதே இப்பட்டறையின் முக்கிய நோக்கம் என வலியுறுத்தினார்.

இதனிடையே, இப்பட்டறை சிறப்பாக நடைபெற அனைத்து வகையிலும் உதவிக்கரம் நீட்டிய பினாங்கு தெக் டோம், கோச் தனியார் நிறுவனம், பொது மருத்துவமனை, குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு மனநல சுகாதார துறை மற்றும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும், அரசு சாரா இயக்கங்கள், பத்திரிக்கை நிருபர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து மனநல ஆரோக்கியத்தை வலியுறுத்த முன்வர வேண்டும்.