உலு முடாவை பாதுகாக்க 3 மாநிலங்கள் சந்திப்புக் கூட்டம் நடத்த வேண்டும் – மாநில முதல்வர்

Admin

எதிர்காலத்தில் நீர்வளங்கள் மற்றும் நிலைத்தன்மை நீடிக்க பினாங்கு மாநில அரசு பினாங்கு நீர் விநியோக வாரியத்துடன் (PBAPP) இணைந்து கடந்த ஜுன் 23-ஆம் திகதியன்று உலு முடா வனப்பாதுகாப்பு திட்டத்தின் பிரச்சாரத்தைத் தொடங்கியது.
2018-ஆம் ஆண்டு உலக நீர் தின கொண்டாட்டத்துடன் இணைந்து இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அரசியல் தலைவர்களுடன் இணைந்து உலு முடா வனப்பாதுகாப்பு திட்டத்தின் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார்.

மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ், பிரச்சாரத்தை துவக்கும் போது, உலு முடா வனப்பாதுகாப்பை காப்பாற்றப்பட வேண்டும் என்ற ஆலோசனை அல்லது திட்டத்தினை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே மாநில அரசு மற்றும் பினாங்கு நீர் விநியோக வாரிய தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை நினைவுறுத்தினார் மாநில முதல்வர்.

கெடா மாநில அரசு, உலு முடா அணைக்கு அருகில் மரங்களை வெட்ட அனுமதி விடுத்த காரணத்தால் காக்கப்பட வேண்டிய வனப்பகுதி தற்போது ஏறத்தாழ 42,000 ஹெக்டேர் வரை வெட்டப்பட்டுள்ளது.
இந்த செயல்பாட்டினால், மூல நீர் வளங்கள் பாதிக்கப்பட்டு, வடக்குப் பகுதியிலுள்ள இரண்டு மாநிலங்களான கெடா, பெர்லிஸ் உட்பட பினாங்கின் 80 சதவிகித நீர் வளத்திற்கு தடையாக உள்ளது.
எனவே, பினாங்கு, கெடா மற்றும் பெர்லிஸ் மாநிலங்களின் நீர் வளங்களை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் என்று பினாங்கு மாநில அரசு விரும்புவதாக சாவ் அவர்கள் பிரச்சாரத்தை தொடக்கி வைத்தப் பின்னர் நடந்தேறிய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் தினசரி மூல நீர் விநியோகத்தையே நம்பியுள்ளன. எனவே, இந்த அரசியல் மாற்றம் ஒரு புதிய ஒளி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும்,  உலு முடாவை காப்பாற்ற தலைவர்கள் (கெடா மற்றும் பெர்லிஸ்) மற்றும் மாநில முதல்வர் (பினாங்கு) ஆகியோருடன் ஒரு பேச்சுவார்த்தை நடத்தி, கலந்துரையாடலின் மூலம் தீர்வுக்காண வேண்டும் என சாவ் கூறினார். முன்னாள் அரசாங்கத்துடன் நடந்தேறிய முந்தைய பேச்சுவார்த்தைகள் எதுவும் முடிவுக்குக் கொண்டுவரவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

இதற்கிடையில், பிரச்சாரத்தின் ஆரம்பமாக, சாவ், நம் நாட்டின் பிரதமருக்கும், நிதியமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இரண்டு மந்திரிகளுக்கு இதையொட்டி ஒரு கடிதம் எழுதப் போவதாகக் கூறினார்.

இந்த பிரச்சனையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, நாங்கள் (மாநில அரசு), இந்த மூன்று மாநிலங்களில் உள்ள மக்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் இந்த பிரச்சாரத்தில் கவனம் செலுத்து வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.