ஓர் ஆண்டு கால கோவிட்-19  தொற்று நோய் எதிர்நோக்க  மேற்கொண்ட சவால்களும் பிரதான திட்டங்களும்

2021, மார்ச்,18-ஆம் நாள் மலேசியா கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான ‘போர் களம்’ தொடங்கி ஓர் ஆண்டு நிறைவு பெறுகிறது. இது உலக முழுவதும் சுகாதார ரீதியில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. 

கடந்த ஆண்டு மார்ச்,18-ஆம் நாள் மலேசிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை  அமலாக்கம் செய்து நாட்டின் எல்லைகளை அடைக்கப்பட்ட நாள்  தொடங்கி, இன்று வரை  பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு இடையில் சமநிலையை உருவாக்க இன்னும் போராடி வருகிறது.

மேம்பாடு மற்றும் அதிகமான மக்கள் தொகை கொண்ட  மாநில பட்டியலில் இடம்பெறும் பினாங்கு மாநிலமும் கோவிட்-19 தாக்கத்தால் அதிக பாதிப்பை எதிர்நோக்கியது.

அண்மையில் பினாங்கு மாநிலம் பசுமை மண்டலமாக கடந்த 91 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டாலும், மீண்டும்  அதிகமான கோவிட்-19 வழக்கு பதிவுகள்  அனைத்து பினாங்கு வாழ் மக்களுக்கும் பெரும் சவாலாக உருமாறியது.   

எனவே, பினாங்கு மாநில அரசு இந்த கோவிட்-19 போர் களத்தில் வெற்றி பெற கையாளும் பிரதான திட்டங்கள் குறித்து மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அவர்களுடன் முத்துச்செய்திகள் நாளிதழ் குழுவினர் சிறப்பு நேர்க்காணல் மேற்கொண்டனர்.

பெரும்பாலான தரப்பினருக்கும் இச்சூழ்நிலை நிர்வகிக்கும் அனுபவம் இல்லாமையால், கோவிட்-19 தொற்று நோய் பொது சுகாதார பாதுகாப்பில்  பெரும் சவாலாக விளங்கியது என கொன் யாவ் கூறினார். 

“இது பொது மருத்துவ விவகாரம் என்பதால், இந்த பிரச்சனையைக் களைய அனைத்து அரசாங்க துறைகளுடன் இணைந்து பிரதான அமைப்பாக மலேசிய சுகாதார அமைச்சு செயல்பட்டது.

“எனவே, ‘முழுமையான அரசாங்கம்’ மற்றும் ‘முழுமையான சமூகம்’ அணுகுமுறையானது இந்த சவாலை எதிர்நோக்க அரசாங்க துறையின் பங்களிப்பு மட்டுமின்றி சமூகத்தின் ஒத்துழைப்பும் மிக அவசியம்,” என கூறினார்.

கடந்து ஓர் ஆண்டு காலமாக மாநில அரசாங்கம் மற்றும் கூட்டரசு அரசாங்கம் நல்லிணக்கத்தை பேணி இந்த கோவிட்-19 தொற்று நோய் தாக்கத்தை கையாண்டு வருகிறது. 

“இது அனைவருக்கும் புதிய அனுபவம் என்பதால் இந்த பிரச்சினையை கையாள  கற்றுக்கொள்கிறோம். நாங்கள் தவறுச் செய்யும் போது அதனை சரிச்செய்து  ஒருவருக்கொருவர் ஊக்கத்தையும் ஆலோசனையும்  வழங்குகிறோம். அதேவேளையில், சில புதிய அணுகுமுறைகளையும் முயற்சிக்கிறோம்.

பொது மக்கள் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள்(எஸ்.ஓ.பி) பின்பற்றல்; நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு இணங்குதல்; மற்றும் இந்த அமலாக்கத்திற்கு ஏற்ப தன்னை மாற்றியமைத்தல் ஆகியவை ‘முழுமையான சமூக’ அணுகுமுறையை கையாள துணைபுரிகிறது என மேலும் கூறினார். 

“அதுமட்டுமின்றி, பல பெருநிறுவனங்கள் மற்றும் அரசு சாரா இயக்கங்களும் முன்னெடுத்து சுய பாதுகாப்பு உபகரணம், முகக் கவசம், கைத்தூய்மி, மற்றும் பல நன்கொடையாகப் பெறப்பட்டன.

“மாநில அரசு பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவும் வகையில் பினாங்கு மக்கள் உதவித் திட்டம் செயல்படுத்த ரிம175.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கியது. 

உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் மக்களின் பொருளாதாரத்திற்கும் இடையிலான சமநிலை மேம்பாடு காண விளங்குகிறது.

“இந்த சமநிலை அடைவது மிக கடினம், ஏனெனில் கடந்த ஓர் ஆண்டு காலத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்திய போது கோவிட்-19 வழக்குகளின் பதிவுகள் சமூகத்திலும் பணியிடங்களிலும் மிக அதிகமாக பரவியது. 

“எனவே, பொது சுகாதாரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை ஆரோக்கியமான பொருளாதார மேம்பாட்டை காண இயலாது,” என்றார். 

உதாரணமாக, மத்திய அரசு கடந்த ஆண்டு மக்கள் பொருளாதாரதத் துறையில் மீட்சி காணும் வகையில் கட்டுப்பாடுகளை தளர்த்த எடுத்த முடிவு கோவிட் -19 தொற்று வழக்குகள் தேசிய சுகாதார பாதுகாப்பை சீர்குலைக்கும் வகையில் மீண்டும் கணிசமான முறையில் உயர்வைக் கண்டது. 

“இருப்பினும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கையாளப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் கடுமையான நடவடிக்கைகள்  அமலாக்கம் ஒவ்வொரு நாளும் கோவிட்-19 வழக்குகள் கணிசமான முறையில் குறைவதைக் காண முடிகிறது. இந்நிலை உயிர் பாதுகாப்பு மற்றும் மக்கள் பொருளாதார மேம்பாடு இடையிலான தொடர்பை சித்தரிக்கிறது. 

மலேசியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் எதிர்கொள்ளும் பொது சுகாதார நெருக்கடி தொடர அனுமதிக்கப்பட்டால் உலக பொருளாதாரம் முடங்கி விடக்கூடும் என்று கொன் யாவ் வலியுறுத்தினார்.

எனவே, எதிர்பார்த்ததை விட குறுகிய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி உலக மக்களுக்கு புதிய நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் அளித்துள்ளது, என்றார்.

“முதலில் ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சி மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று அறியப்பட்டது. இது மிக நீண்ட காலம் மற்றும் தவிர்க்க முடியாத சூழலிக் உலகப் பொருளாதாரத்தை முடக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

“எனவே, உலகெங்கிலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளின் பலனாக, கோவிட்-19 தடுப்பூசி இறுதியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. 

“பொது மக்கள் அனைவரும் இந்த நோய் தடுப்பு திட்டத்தில் பங்கெடுத்து தடுப்பூசி பெறுவதன் மூலம் சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க இயலும் என நம்பிக்கை தெரிவித்தார்.