கலாடெக் டெக்னாலஜிஸ் பினாங்கில் புதிய ஆலையைத் திறந்து, மேம்பட்ட உற்பத்தித் துறையை வலுப்படுத்துகிறது

Admin
img 20260612 wa0167

பிறை – கலாடெக் டெக்னாலஜிஸ் நிறுவனம் பினாங்கில் தனது புதிய ஆலையை அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது. இது, தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களுக்கான முன்னணி மையமாக பினாங்கின் நிலையை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான மைல்கல்லாகத் திகழ்கிறது.

இந்த முதலீடு பினாங்கின் அடுத்தகட்ட தொழில் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் உயர் மதிப்புமிக்க தொழில் மேம்பாட்டை பிரதிபலிப்பதாக என்று மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.
70efe38d 09de 44cf afa5 9cfcc6f57db8

இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தானியக்கம், குறைக்கடத்தி உபகரணங்கள் மற்றும் உயிர் அறிவியல் தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்ற கலாடெக், குறைக்கடத்தி, மேம்பட்ட மின்னணுவியல், உயிர் அறிவியல் மற்றும் நிலையான ஆற்றல் துறைகளுக்கு மேம்பட்ட உபகரண உற்பத்தி, அமைப்பு ஒருங்கிணைப்பு, பொருத்துதல், சோதனை மற்றும் விநியோக சேவைகளை வழங்குகிறது.

891ab86b 2530 4ae4 9946 eea016cb89c0
இந்தப் புதிய வசதி பினாங்கின் உயர் தொழில்நுட்ப தொழில் சூழலை மேலும் வலுப்படுத்துவதுடன், எதிர்கால தொழில் வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிறுவனம் 2 மில்லியன் அமெரிக்க டாலர் ஆரம்ப முதலீட்டுடன் செயல்படவுள்ளது, அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் 60 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், ஐந்து ஆண்டுகளுக்குள் மொத்த முதலீடு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விரிவாக்கத்தின் மூலம் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் மலேசியப் பணியாளர்கள் எண்ணிக்கை முதல் ஆண்டில் 20 முதல் 30 பேராக இருந்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 100 ஊழியர்களாக உயர்த்தப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

“முதலீடுகளை ஈர்ப்பதுடன், மேம்பட்ட உற்பத்தியின் எதிர்காலத்தை ஆதரிக்கும் வகையில் வலுவான தொழில்துறை திறன்கள், புத்தாக்கம் மற்றும் திறமையான பணியாளர்களை உருவாக்குவதிலும் பினாங்கு கவனம் செலுத்தி வருகிறது,” என்று முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

இந்த திறப்பு விழாவில் கலாடெக் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு. டேவிட் டான், இன்வெஸ்ட் பினாங்கின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ லூ லீ லியான், MIDA பினாங்கின் இயக்குநர் முஹம்மது கடாஃபி சர்தார் முகமது மற்றும் கிரானைட் ஆசியா நிறுவனத்தின் மூத்த நிர்வாகப் பங்குதாரர் ஜென்னி லீ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

“தானியக்கமாக்கல், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களால் இயக்கப்படும் மாற்றத்தில் பினாங்கு தொடர்ந்து முன்னணியில் நிலைத்திருக்க உறுதியாக உள்ளது,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கலாடெக் நிறுவனம் உள்ளூர் விநியோகஸ்தர் வலையமைப்புகளை வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வரவேற்ற முதலமைச்சர் சாவ் கொன் இயோவ், திறன் மேம்பாடு மற்றும் தொழில் இணைப்புகளை மேம்படுத்த பினாங்கு ATE வளாகம் போன்ற தளங்கள் மூலம் மேலும் ஒத்துழைப்புகளை உருவாக்குமாறு ஊக்குவித்தார்.

கலாடெக் போன்ற மூலோபாய கூட்டாண்மைகள் பினாங்கின் நீண்டகால தொழில்துறை போட்டித்தன்மையை வலுப்படுத்துவதுடன், மேம்பட்ட உற்பத்தியின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கும் பங்களிக்கும் என்று அவர் தெரிவித்தார்.