சமூக மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட முக்கோண கூட்டமைப்பு

Admin

பினாங்கு கல்வி நிறுவனத் தொழிலதிபர் சங்கம் (Persatuan Pengusaha Institusi Pendidikan Pulau Pinang) மற்றும் மலேசியக் கல்வி மைய முதலாளிகள் சங்கம் (Persatuan Majikan Pusat Pendidikan Malaysia), ‘H Healthcare Berhad’ நிறுவனத்துடன் இணைந்து மாணவர்கள், பெற்றோர்கள், தனியார் கல்வி நிறுவனம் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்களில் பணிபுரியும் கல்வியாளர்கள் ஆகியோருக்கு
நன்மைகளை வழங்கும் வகையில் ஒத்துழைப்பு நல்கி வருகின்றது.

அண்மையில், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் முன்னிலையில் மூன்று தரப்பினர் இடையிலான கூட்டமைப்புக்கு முத்திரை பதிப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டனர்.

தனியார் துறை மற்றும் அரசு சாரா அமைப்புகள் சார்ந்த இம்மூன்று தரப்பினர்களும் சமூகத்தின் நலனுக்காக இணைந்து செயல்படும் முன்முயற்சிக்குப் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் கூறினார்.
“PPIPPP மற்றும் PMPPM ஆகிய இரு சங்கங்களும் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் தீவிரமாகச் செயல்படுகிறது. இது அவர்கள் சமூக நல்வாழ்வின் மீது கொண்டுள்ள அக்கறையைப் பிரதிபலிக்கிறது.

“H Healthcare Berhad நிறுவனம், சமூகத்தின் நல்வாழ்வுக்கு சிறந்த பங்களிப்பு நல்குகிறது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

“அதிக பெருநிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்தி சமூக மேம்பாட்டிற்கு அதிக பங்களிப்பை வழங்கும் என்று நம்பப்படுகிறது,” என குமரேசன் இந்நிகழ்ச்சியில் கூறினார்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது, ​​‘ஆரோக்கியமான குடும்பத் திட்டம்’ தொடங்கப்பட்டது.
இது PPIPP, PMPPM மற்றும் H Healthcare Berhad கூட்டமைப்பில் நடத்தப்படும்.இத்திட்டத்தின் கீழ் சுமார் 7,500 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் 1,500 கல்வியாளர்கள் பயனடைவார்கள்

இத்திட்டத்திற்காக H Healthcare Berhad நிறுவனம் ரிம2.6 மில்லியன் நிதியுதவி வழங்கியுள்ளது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை, ஊட்டச்சத்து ஆலோசனை, ரிம50 கட்டண வரம்பில் மருத்துவ ஆலோசனை மற்றும் முதலுதவி பயிற்சிகளும் வழங்கப்படும்.

இத்திட்டத்தைப் பற்றி மேலும் அறிய, www.facebook.com/ppippenang & www.facebook.com/PersatuanMajikanPusatPendidikanMalaysia முகநூல் அகப்பக்கத்தை வலம் வரவும்.
மருத்துவச் சேவைகள் மற்றும் சுகாதார மேலாண்மை திட்டங்களைப் பற்றி மேலும் அறிய, H Healthcare Berhad இன் துணை நிறுவனமான BeFit Wellness Hub இன் www.befitwellnesshub.com என்ற இணையதளம் அல்லது H Ambulatory Care Centre இன் இணையதளமான www.hmedicalcentre.co-ஐ பொதுமக்கள் பார்வையிடலாம்.