ஜார்ச்டவுன் – ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியின் கொண்டாட்டமாக திகழும் வடக்கு பிராந்திய சீக்கியர் குடும்ப விழாவில் கலந்து கொள்ள இன்று காலை பினாங்கு யூத் பூங்காவில் 600-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கூடியிருந்தனர்.
கனத்த மழைப் பெய்த போதிலும், பங்கேற்பாளர்களும் ஏற்பாட்டாளர்களும் உற்சாகமாக விழாவில் கலந்து கொள்ள வருகையளித்தனர். இறுதியில், வானிலை இக்கொண்டாட்டத்திற்கு இடமளித்தது.

இந்த விழாவில் கலந்து கொண்ட மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், வட பிராந்தியத்தைச் சேர்ந்த பிற குருத்வாராக்களுடன் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த, பினாங்கு வாடா குருத்வாரா சாஹிப் ஏற்பாட்டுக் குழுவினரைப் பாராட்டினார்
இந்நிகழ்ச்சி ‘மேளா’ எனும் சேவாவின் உயிரோற்றமானத் தருணமாக அமைகிறது. இது சீக்கியர் சமூகத்தின் தன்னலமற்ற சேவையாகத் திகழ்வதோடு தலைமுறைகளை இணைக்கும், இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் மற்றும் நல்லிணக்கத்தை கடைப்பிடிக்கப்படுவதை நமக்கு நினைவூட்டுகிறது என்று முதலமைச்சர் கூறினார்.

“இந்தக் கொண்டாட்டம் பண்டிகையைக் கடந்து குடும்பம், நம்பிக்கை மற்றும் நட்பின் பிணைப்புகளை வலுப்படுத்தும் தருணங்களாக அமைகிறது.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, சீக்கியர் சமூகத்தினர் தைரியம், நியாயம் மற்றும் நல்லொழுக்கம் மேன்மையுடன் வழிநடத்தப்பட்டு, வியாபாரத் துறை, பொதுச் சேவை மற்றும் குடிமைத் தலைமை மூலம் மலேசியாவை வடிவமைக்கப் பங்களிப்பு வழங்கியுள்ளனர்.
“அனைவருக்கும் உணவளிக்கும் ‘லங்கார்’ எனும் குருத்வாராவின் சமூக சமையலறை முதல், தேவைப்படும் நேரங்களில் உதவியளிக்கும் தன்னார்வலர்கள் வரை, உங்கள் அமைதியான கருணைச் செயல்கள் நமது சமூகத்தின் நீடித்த தூண்களாகத் தொடர்கின்றன,” என்றார்.

பினாங்கில், வைசக்கி திறந்த இல்ல உபசரிப்பு, ‘பினாங்கு சிறிய சமலான்’, வைசாக்கி விளையாட்டுகள் மற்றும் அண்மையில் முடிவடைந்த ‘சோல்ஜா முகாம்’ போன்ற கூட்டங்களிலும் எதிரொலிக்கிறது, என்றார்.
மேலும், இளைஞர் முகாம்கள் (சமலான்) மற்றும் மத சபைகள் (சமகாம்) முதல் குருத்வாரா கோப்பை மற்றும் ‘MASPORE’ விளையாட்டுகள் வரை சீக்கியர்கள் வழிநடத்தும் பல வருடாந்திர நிகழ்ச்சிகளிலும் நல்லிணக்க உணர்வு மேலோங்கி காணப்பட்டும்.

இந்த முன்முயற்சி திட்டங்கள் குறித்து பினாங்கு சீக்கியர் நௌஜவான் சபா மற்றும் பட்டர்வொர்த் சீக்கிய இளைஞர்கள் மூலம் நன்கு அறிவேன்.
இந்த முன்முயற்சிகள் கலாச்சாரத்தை உயிர்ப்பிப்பதோடு, இளைஞர்களை அதிகாரமளித்து, சிறந்த சேவை வழங்க இணக்கம் கொள்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்னதாக, பினாங்கு மாநிலம், அனைத்துலக மதங்களுக்கு இடையிலான அமைதி மாநாட்டை ஏற்று நடத்தியது. இந்த மாநாடு அமைதியும் நல்லிணக்கமும் ஒருபோதும் தற்செயலாக அடையப்படுவதில்லை என்பதை சரியான நேரத்தில் நினைவூட்டுகிறது.
முதலமைச்சராக, குடும்பங்களை ஒன்றிணைக்கும், இளைஞர்களை அதிகாரமளிக்கும் மற்றும் மதங்களுக்கு இடையிலான புரிதலை வலுப்படுத்தும் திட்டங்களுக்கு பினாங்கின் தொடர்ச்சியான ஆதரவை உறுதியளிக்கிறேன்.
“பினாங்கு2030
இலக்கின் கீழ் தேசிய ரீதியில் பிரமிக்கும் குடும்பத்தை மையமாகக் கொண்ட பசுமை மற்றும் விவேக மாநிலத்தை உருவாக்குதல் மூலம் இந்தப் பிணைப்புகளை ஆழப்படுத்தும் கலாச்சார விழாக்கள், சுகாதார முயற்சிகள் மற்றும் இளைஞர் மேம்பாட்டை நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம்.
இன்றைய குடும்பத் தினக் கொண்டாட்டத்தில் உற்சாகமூட்டும் இசை நிகழ்ச்சி, ஆடல் பாடல், மகிழ்ச்சியான விளையாட்டுக்கள் மற்றும் குடும்பத்தின் அரவணைப்பு ஆகிய சூழ்நிலையை பிரதிபலிக்கின்றன. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, விளையாட்டுப் போட்டிகள், சுகாதார முகாம் மற்றும் ‘பாங்க்ரா’ நடன இறுதிப் போட்டியைக் காண சிறியோர் முதல் பெரியோர் கூடியுள்ளனர்.
இதற்கிடையில், இரண்டாலம் துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் தியோ, அடுத்த ஆண்டு இந்த விழாவை ஏற்பாடு செய்வதில் மேலும் பல மாநிலங்கள் இணையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த ஆண்டு, பிறை, பட்டர்வொர்த், கூலிம், சுங்கை பட்டாணி, அலோர் ஸ்டார், கங்கர் மற்றும் தைப்பிங் ஆகிய இடங்களிலிருந்து அமைந்திருக்கும் குருத்வாராக்கள் இந்த விழாவில் பங்கேற்றன.