சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுத் திட்டத்திற்கு நிதியுதவி

கெபுன் பூங்கா – “ சிறப்பு நிதியுதவி 2018 திட்டத்தின் கீழ் கடந்த 28 டிசம்பர் 2018 அன்று சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியின் மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரிம350,000 நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசின் துணையுடன் கட்டுமானப் பணிகள் செவ்வென நடைபெறுவதை காண்காணிக்கப்படும்,” என துணை கல்வி அமைச்சர் தியோ நீ சிங் அப்பள்ளிக்கு வருகையளித்த இவ்வாறு தெரிவித்தார்.

மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து முதல் முறையாக விரைவாக இத்தமிழ்ப்பள்ளியின் பிரச்சனைக்குத் தீர்வுக் கண்டுள்ளது என சட்டமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார். மேலும், பள்ளி நிர்வாகம், மாநில கல்வி இலாகா ஆகியோருக்கு நன்றியை நவிழ்ந்தார் குமரேசன்.

மேலும், தற்காலிக வகுப்பறைகள் நிர்மாணிப்பதற்கு நிதியுதவி வழங்கிய பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சின் தியூ சின் மற்றும் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் நன்றியைத் தெரிவித்து கொண்டனர்.

பினாங்கு மாநில சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பணிக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில் துறை துணையமைச்சர் சிம் திசு சின், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் அ.குமரேசன், பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் அலுவலக பிரதிநிதிகள் ஆகியோர் அப்பள்ளிக்கு வருகையளித்து கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டனர்.

கடந்தாண்டு 4 ஆம் தேதி அக்டோபர் மாதம் சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர், நிர்வாகம் வாரிய உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆகியோருடன் இப்பள்ளியின் கூடுதல் கட்டிடம் கட்டுமானத்திற்கான நிதியுதவிப் பற்றி  கலந்துரையாடல் நடத்தப்பட்டது.