செயற்கைக் கால் வழங்கும் திட்டத்தில் 200 வசதிக்குறைந்த விண்ணப்பதாரர்கள் பயன்பெறுவர் – பேராசிரியர்

Admin

ஜோர்ச்டவுன் – பினாங்கு ஹோன் கோர் மோரல் சங்கம் பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் செயற்கைக் கால் வழங்கும் திட்டத்தினை இன்று கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அறிவிப்பு செய்தார்.

செய்தியாளர் சந்திப்பில் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி கலந்து கொண்டார்

இந்த செயற்கைக் கால் திட்டம் நான்காவது முறையாக வழங்கப்படவுள்ளதை செய்தியாளர் சந்திப்பில் பேராசிரியர் ப.இராமசாமி குறிப்பிட்டார். இத்திட்டம் பிரத்தியேகமாக இந்தியர்களுக்கு வழங்க இணக்கம் கொண்டுள்ளதால் இந்தியர்கள் விண்ணப்பப் பாரத்தை பினாங்கு ஹோன் கோர் மோரல் சங்கம், ஜாலான் மெக்கலிஸ்தர் அல்லது இரண்டாம் துணை முதல்வர் அலுவலகம் , 52-ஆவது மாடி, கொம்தார் மற்றும் பால்சங்கம் உணவகம், டத்தோ கிராமாட் ஆகிய இடங்களில் பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் செயற்கை கால் திட்டதிற்கான விண்ணப்பம் டிசம்பர்1 முதல் ஜனவரி 15 2019 வரை விண்ணப்பிக்கலாம்.

இதனிடையே, விண்ணப்பங்கள் அனைத்தும் இரண்டாம் துணை முதல்வர் அலுவலக சமூகநல அதிகாரி பரிசீலித்து தகுதியானவர்களை தேர்வுச்செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது. செயற்கைக் கால் பொருத்தும் இத்திட்டம் தாய்லாந்து நாட்டை சார்ந்த “the prostheses foundation of H.R.H” எனும் அறக்கட்டளையின் துணையுடன் இடம்பெறும் என்றால் மிகையாகாது.

இந்நிகழ்வில் பினாங்கு ஹோன் கோர் மோரல் சங்க பிரதிநிதி இராகேந்திரன் மற்றும் இரண்டாம் துணை முதல்வர் அலுவலக சமூகநல அதிகாரி இளம்பேறு ஆகியோரும் உடன் கலந்து கொண்டனர்

இத்திட்டத்திற்காக நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோர் தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்டு அடுத்தாண்டு 12 மே 2019 முதல் 18 மே 2019 வரை தகுதிப்பெற்ற வசதிக்குறைந்தவர்களுக்கு பொருத்தப்படும் என இராகிந்திரன் தெரிவித்தார். எனவே, இத்திட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற வசதிக்குறைந்த இந்தியர்கள் அழைக்கப்படுகின்றனர்.

விண்ணப்பதாரர்கள் அடையாள அட்டையின் நகல், மருத்துவர் அறிக்கை, பாதிக்கப்பட்ட அல்லது வெட்டப்பட்ட கால் பகுதியின் புகைப்படம் மற்றும் விண்ணப்பதாரரின் நிற்கும் நிலையில் இருக்கும் முழு புகைப்படம் ஆகியவை விண்ணப்பப் பாரத்துடன் இணைக்க வலியுறுத்தப்படுகின்றனர். இம்முறை இத்திட்டத்தில் சுமார் 200 வசதிக்குறைந்த விண்ணப்பதாரர்கள் பயன்பெறுவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

செயற்கைக் கால் பொருத்தும் திட்டம் பற்றிய மேல்விபரங்களுக்கு பினாங்கு ஹோன் கோர் மோரல் சங்க உறுப்பினர் ராகேந்திரன் (010-2177871) மற்றும் இரண்டாம் துணை முதல்வர் அலுவலக சமூகநல அதிகாரி இளம்பேறு (016-6505134) என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம். மேலும், இத்திட்டத்திற்கான விண்ணப்பப் பாரத்தை (https://drive.google.com/open?id=1kVNDPGUc24TnespsJL33bXRTkpAgKozJ) எனும் அகப்பக்கத்தில் பெற்றுக்கொள்ளலாம்.