ஜோர்ஜ்டவுன் பாரம்பரியத் தளத்தில் அமைந்துள்ள கட்டடங்களை முறையாகப் பராமரிப்பீர்- தே லாய் எங்

Admin

கடந்த ஜூன் 3ஆம் திகதி ஜாலான் லிம் சுவி லியோங் சாலையில் அமைந்துள்ள மூன்று பாழடைந்த வீடுகள் இடிந்து விழுந்தன.  70 சதவிகிதம் பலகையால் அமைக்கப்பட்ட கட்டடங்கள் பலத்த காற்று வீசப்பட்டு நிலைத்தன்மை இழந்ததாலும், வீட்டு உட்பகுதியை ஆட்கொண்ட ராட்சத வேர்களைக் கொண்ட மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும் இடிந்து விழுந்து சேதமடைந்தன.  சத்தம் கேடு பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிற்கு விரைந்ததால் எந்த ஓர் உயிர்ச் சேதமோ காயமோ ஏற்படவில்லை.

இச்சம்பவ இடத்திற்கு வருகை மேற்கொண்ட புதிய கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய தே லாய் எங் தாமான் வாரிசானில் அமையப்பெற்றுள்ள 20 கட்டடங்களைப் பாதுகாப்புக் கருதி கட்டட உரிமையாளர்கள் உடனடியாக மறுசீரமைப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது வலியுறுத்திக் கூறினார்.

மிகவும் மோசமான நிலையில் உள்ள இக்கட்டடங்கள் அனைத்தும் மறுசீரமைப்புச் செய்யப்படாவிட்டால் எதிர்பாராத நிகழ்வுகள் நடப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று திரு தே மேலும் கூறினார். இடிந்து விழுந்த வீடுகள் 100 ஆண்டிற்கும் மேல் பழமை வாய்ந்த வீடுகளாக இருப்பதுடன் முறையான பராமரிப்பும் கண்காணிப்பும் இல்லாமல் அப்படியே விடப்பட்டதால்தான் இந்நிகழ்வு நிகழ்ந்துள்ளதாக அவர் மேலும் விளக்கமளித்தார். பாதுகாப்பற்றுக் கிடக்கும் இவ்வீடுகளை உடனடியாக மறுசீரமைப்புச் செய்ய உத்தரவிட்டிருப்பதாக பினாங்கு நகராண்மைக் கழகத்தின் பாரம்பரியத் துறை பொறியியலாளர் ஃபாஜ்ரீன் டார்லிலா தெரிவித்தார்.

மதிப்புடைய நிலப்பகுதியில் அமைந்துள்ள இவ்வீடுகளை அதன் உரிமையாளர்கள் சீரமைத்து அதை நன்முறையில் பராமரித்து வந்தால் பல இலாபகரமான விசயங்களுக்குப் பயன்படுத்தாலம் என்று அவர் வலியுறுத்தினார். தொழில் அடிப்படையில் அதனைக் கடை வீடுகளாகவும் உருமாற்றி பயன்படுத்தவும் முடியும் என்று கூறினார். இதன் மூலம், இவர்களுக்குதான் இலாபம் கிடைக்கும் என்றார். அப்படிச் செய்யத் தவறியதால்தான் இங்குள்ள பல கட்டடங்கள் பாழடைந்து இடிந்து விழும் அளவிற்கு மிக மோசமான நிலையில் உள்ளன. இதனால், உலகப் பாரம்பரியமிக்க தளம் என்று பெயர் பெற்றுள்ள ஜோர்ஜ்டவுன் நகரின் தோற்றமும் மதிப்பும் பாதிப்படைகிறது என்பதை கருத்தில் கொண்டு இக்கட்டட உரிமையாளர்கள் திறன்பட செயல்பட வேண்டும் என்று திரு தே அறிவுறுத்தினார்.

இடிந்துவிழுந்த கட்டடங்களைப் பார்வையிடும் கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய தே லாய் எங் மற்றும் பினாங்கு நகராண்மைக் கழகத்தின் பாரம்பரியத் துறை பொறியியலாளர் ஃபாஜ்ரீன் டார்லிலா
இடிந்துவிழுந்த கட்டடங்களைப் பார்வையிடும் கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய தே லாய் எங் மற்றும் பினாங்கு நகராண்மைக் கழகத்தின் பாரம்பரியத் துறை பொறியியலாளர் ஃபாஜ்ரீன் டார்லிலா