திடீர் வெள்ளப்பெருக்கு தடுக்க எம்.பி.பி.பி & எம்.பி.எஸ்.பி ஊழியர்கள் வடிக்கால் துப்புரவுப்பணி மேற்கொள்ள உத்தரவு – ஜெக்டிப்

Admin

டத்தோ கெராமாட் – பினாங்கு மாநிலத்தில் ஏற்படும் திடீர் வெள்ளப்பெருக்கை தடுக்க மாநிலத்தின் இரு ஊராட்சி மன்றங்களான பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) மற்றும் பினாங்கு செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) வழக்கமான துப்புரவு மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இரு ஊராட்சி மன்ற நடவடிக்கைகளின் மூலம் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க முடியும் என உள்ளூராட்சி, வீடமைப்பு மற்றும் நகர்புற & கிராமப்புற மேம்பாடு திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ நம்பிக்கைத் தெரிவித்தார்.
“ஏறக்குறைய 4,991 எம்.பி.பி.பி மற்றும் எம்.பி.எஸ்.பி தொழிலாளர்கள் வடிக்கால்கள், சாலைகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைத் சுத்தம் செய்யும் பராமரிப்புப் பணிகளில் ஈடுப்படுகின்றனர்.

“அண்மையில் நீண்ட வறட்சி காலம் ஏற்பட்டதால் நீர் ஓட்டம் இல்லாமையால் வடிக்கால்கள் அடைபட்டிருக்கலாம். எனவே, இப்போது மழைக்காலம் வந்துவிட்டதால், தூய்மைப்படுத்தல் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கான அட்டவணைப் பின்பற்றி அடிக்கடி இரு ஊராட்சி மன்ற அதிகாரிகளும் செயல்பட உத்தரவிட்டுள்ளேன்.

“வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்கள் குறிப்பாக டத்தோ கெராமாட் பகுதியில் வெள்ளம் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு அனைத்து வடிக்கால்கள் மற்றும் பிரதான வடிக்கால்களில் துப்புரவுப் பணிகளும் பரிதோசனைகளும் மேற்கொள்ள வேண்டும் என டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் தெரிவித்தார்.

மேலும், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர் மற்றும் மூத்த பொது சுகாதார உதவியாளர் கூ எங் சொங் கலந்து கொண்டனர்.

ஜெக்டிப் கூறுகையில், எம்.பி.பி.பி 1,900 ஊழியர்களில் 869 ஊழியர்கள் ‘மஞ்சள் வீரர்கள்’ அதாவது துப்புரவுப் பணிகள் மேற்கொள்வர்.
“தளர்வடையாமல் துப்புரவுப் பணிகளைச் செய்யும் ஊழியர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
“பினாங்கில் பொது மக்களின் பாதுகாப்பிற்கும் சுகாதாரத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படும். எனவே, கடமையில் ஈடுப்படும் மஞ்சள் வீரர்களும் பணியாற்றும் போது பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் இராயர், ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் உடன் இணைந்து அத்தொகுதி 400 தனித்து வாழும் தாய்மார்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கினர். அனைத்து தாய்மார்களும் அன்னையர் தினத்தை முன்னிட்டு மலர் கொத்துப் பெற்றுக்கொண்டனர்.