துப்பாக்கி உரிமம் வழங்குவதில் காவல் துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் -முதல்வர்

மாநில முதல்வர் அமரர் திரு செந்தில் குமாரின் மனைவி திருமதி தாட்சாய்னிக்கு ஆறுதல் கூறி இழப்பீடு தொகை வழங்கினார்.

மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் துப்பாக்கி உரிமம் விண்ணப்பிக்கும் நபர்கள் மீது மனஆரோக்கியம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என காவல் துறையிடம் வலியுறுத்தினார். “கடுமையான சட்டத்திட்டங்கள் மேற்கொள்வதன் மூலம் விபரிதமான சம்பவங்கள் தவிர்க்கப்படலாம்” என அமரர் திரு செந்தில் குமார் குடும்பத்தை காண சென்ற போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திரு செந்தில் குமார்,38 சமீபத்தில் துன் டாக்டர் லிம் சொங் யூ நெடுஞ்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் அகால மரணம் அடைந்தார். இந்த கொடூர சம்பவத்தில் மூவர் மரணம், நால்வர் காயம், அதேவேளையில் ஒருவர் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாநில முதல்வருடன் இணைந்து ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் ஹொக் செங் மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் திரு டேவிட் மார்ஷெல் அகால மரணம் அடைந்த திரு செந்தில் குமார் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். இந்த சம்பவத்தில் அகால மரணம் ஏய்த அனைவரையும் மாநில முதல்வர் நேரில் சென்று அனுதாபம் கூறியதோடு இழப்பீடு தொகையும் வழங்கினார்.
முதல்வர் பூக்கடை வியாபாரியாகப் பணிப்புரிந்த அமரர் திரு செந்தில் குமாரின் மனைவி திருமதி தாட்சாய்னிக்கு ஆறுதல் கூறியதோடு நிதியுதவியும் வழங்கினார். மேலும் காயமடைந்தவர்களையும் பினாங்கு மருத்துவமனையில் நேரில் கண்டு நலம் விசாரித்தார்.