தைப்பூசம் 2018

இந்து அறப்பணி வாரியம்

வருகின்ற 31 ஜனவரி 2018 கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச கொண்டாட்டத்தின் முதல் நாளன்று பினாங்கு அருள்மிகு ஶ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தின் இரத ஊர்வலம் லெபோ பந்தாய் குயீன் ஸ்திரிட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து காலை 5.00 மணிக்கு புறப்பட்டு அன்றிரவு9.00 மணி அளவில் ஆலயத்தை சென்றடையும் என இந்து அறப்பணி வாரிய நிர்வாகத்தினர் அறிவித்திருகின்றனர்இரண்டாவது ஆண்டாக இவ்வாண்டும் தங்க இரதத்தில் வேல் முன்னோக்கிச் செல்ல பின் தொடர்ந்து முருகப்பெருமான் வெள்ளி இரத்ததில் பக்தர்களுக்கு அருள் காட்சியளிப்பார்.  

தைப்பூச தினத்தன்று சந்திர கிரகணம் நிகழவிருகிறதுஇதனை முன்னிட்டு ஆலயம் அத்தினத்தன்று மாலை மணிக்கு திருக்காப்பு இடப்படும்.எனவேபக்தகோடிகள் தைப்பூச தினத்தன்று மாலை 5.00 மணிக்குள் பால் குடங்கள் மற்றும் காவடிகள் என நேர்த்திகடன்களை செலுத்திவிடுமாறு ஶ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயம் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டனர்.

இரத ஊர்வலத்தில் கலந்து கொண்டு அர்ச்சனை மற்றும் காணிக்கை செலுத்தும் பக்தர்கள் மேல் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் வருகையளித்து முருகப்பெருமானின் ஆசிர்வாதம் பெற அழைக்கப்படுகின்றனர்மேலும் தங்க இரத ஊர்வலத்தில் கலந்து கொண்டு இரதத்தை இழுக்க விரும்ப்பும் பக்தர்களும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

பக்தகோடிகள் அமைதியான முறையில் சமய நெறியோடும் பக்தியுடனும் தைப்பூச கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு முருகப்பெருமானின் ஆசிப்பெற அழைக்கப்படுகின்றனர்.