தைவான் உலக ரோபோடிக் போட்டியில் பினாங்கு மாணவர்கள் 80 பதக்கங்களுடன் சாதனை

Admin
img 20260106 wa0073

ஜார்ச்டவுன் – கடந்த ஆண்டு தைவான், தைபேயில் நடைபெற்ற உலக ரோபோடிக் போட்டி (WRG) 2025 இல், மொத்தம் 24 மலேசிய மாணவர்கள் (அவர்களில் பெரும்பாலோர் பினாங்கைச் சேர்ந்தவர்கள்) பங்கேற்று, தங்கள் சிறந்த திறமையை வெளிப்படுத்தினர்.

உலகின் மிகப்பெரிய ரோபோடிக் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) சார்ந்த போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நிகழ்ச்சியில், இளம் மலேசிய மாணவர்கள் 80 பதக்கங்களை வென்று, அனைத்துலக மட்டத்தில் மலேசியாவின் பெயரை உயர்த்தும் சிறப்பான சாதனையைப் பதிவு செய்தனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 வரை நடைபெற்ற இந்த உலக ரோபோடிக் போட்டியில், தைவான், ஜப்பான், தென் கொரியா, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

பினாங்கு வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு கூறுகையில், தமிழ்ப்பள்ளிகள் மற்றும் இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த போட்டி முழுவதும் தங்களின் திறமை, மீள்தன்மை மற்றும் உறுதியை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

அவர்களின் சாதனைகள் வெறும் எதிர்பார்ப்புகளை மீறியது மட்டுமல்ல, கடந்த ஆண்டை விட மேலான செயல்திறனையும் வெளிப்படுத்தி, மலேசியாவின் மாணவர் திறனை உலக அரங்கில் மேலும் உயர்த்தியுள்ளது.

“ஒவ்வொரு மாணவரும் அவரவர் பிரிவில் குறைந்தது ஒரு பதக்கத்துடன் வீடு திரும்பியுள்ளனர். இது அவர்களின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பை நன்கு பிரதிபலிக்கிறது,” என்று அவர் கூறினார்.

img 20260106 wa0074

பினாங்கு தமிழ்ப்பள்ளிகள் சிறப்புக் குழுவின் தலைவருமான டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ, மாணவர்களின் இந்த சிறப்பான வெற்றியில் ஆழ்ந்த பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். மேலும், குறிப்பாக ரோபோட்டிக்ஸ், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் சார்ந்த துறைகளில் இளம் திறமைகளை வளர்ப்பது எதிர்கால தலைமுறைக்கான முதலீடாகும் என்பதை வலியுறுத்தினார்.

“தமிழ்க் கல்வியின் தரத்தை தொடர்ந்து வலுப்படுத்துவதே எனது பொறுப்பு, இதில் STEM மற்றும் உலகளாவிய தொழில்நுட்பத்திற்கான அணுகலை விரிவுபடுத்துவதும் உள்ளடங்கும்.

“நமது குழந்தைகள் பெரிய கனவு காணத் துணிந்தால் தான், நமது நாடும் எதிர்காலத்தில் முன்னேற்றம் காணும்.”

“இந்த சாதனை தமிழ் சமூகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து மலேசியர்களுக்கும் பெருமை சேர்ப்பதாகும். நமது மாணவர்களுக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படும்போது அவர்களால் என்ன சாதிக்க முடியும் என்பதை இது நிரூபிக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

img 20260106 wa0069

பல பங்கேற்பாளர்களுக்கு, இந்த போட்டி அவர்களது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய அனுபவமாக அமைந்தது.

போட்டியாளர்களின் ஒருவரான, டத்தோ கெராமாட், மெதடிஸ்ட் ஆண்கள் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த நிஷாந்த் ரவீந்தரன்,16 இது அனைத்துலக ரோபாட்டிக்ஸ் போட்டியில் தான் பங்கேற்ற முதல் அனைத்துலக போட்டி என கூறினார்.

“இந்த ஆண்டு ஜப்பானில் நடைபெறும் போட்டியிலும், இதே அளவிலான செயல்திறனைத் தொடர்ந்து காட்ட முடியும் என்று நம்பிக்கை கொள்கிறேன்,” என்று மலேசியாவுக்காக சாம்பியன் பதக்கம் வென்ற பிறகு அவர் முத்துச் செய்திகளிடம் இவ்வாறு கூறினார்.

இன்று ஜார்ச்டவுன், பேவியூ தங்கும்விடுதியில் பினாங்கு முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

மேலும் மாநில ம.இ.கா தலைவர் டத்தோ தினகரன் மற்றும் சிஸ்கோர் இயக்குனர் காளிதாசன் கணேசா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

“இந்த அர்த்தமுள்ள விழாவில், அனைத்துலக அரங்கில் தங்கள் குறிப்பிடத்தக்க சாதனைகள் மூலம் மாநிலத்திற்கும் தேசத்திற்கும் பெருமை சேர்த்த 22 தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனைகளை நாங்கள் கொண்டாடுகிறோம்.

“இந்த வெற்றி அவர்களின் குடும்பங்களையும் பள்ளிகளையும் பெருமைப்படுத்துவது மட்டுமல்லாமல், பினாங்கு மாநில மாணவர்கள் தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் ரோபாட்டிக்ஸ் ஆகியவற்றில் மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளனர் என்பதையும் நிரூபிக்கிறது,” என்று அவர் கூறினார்.

உலக அரங்கில் சாதனைப் படைக்க ஊக்கமளித்த மாணவர்களின் விடாமுயற்சி, ஒழுக்கம், பொறுமை மற்றும் தைரியத்தை சாவ் பாராட்டினார். மேலும், அவர்களின் சாதனை சிறந்து வெற்றியை அடைவதற்கு வயது, கல்வி அல்லது பின்னணி என எல்லைகள் எதுவும் கிடையாது என்பதைக் காட்டுகின்றன என்றும் கூறினார்.

சாவ்வின் கூற்றுப்படி, ரோபாட்டிக்ஸ் இனி ஒரு இணை பாடத்திட்ட செயல்பாடு அல்ல, மாறாக STEM கல்வி சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

பினாங்கை ஒரு விவேகமான, புத்தாக்கம் மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த மாநிலமாக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட பினாங்கு2030 தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப மிகவும் திறன்மிக்க மனித மூலதனத்தை வளர்ப்பதற்கான அடித்தளத்தை இது உருவாக்குகிறது,” என்று அவர் மேலும் விவரித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடு தழுவிய தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்த ரிம50 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பை வரவேற்பதாக மாநில முதலமைச்சர் சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

“இந்த அறிவிப்பு மிகவும் நேர்த்தியானதுமாகவும், காலத்தேவையானதுமாகவும் திகழ்கிறது. 2008 முதல் பினாங்கு மாநிலத்தில் பெற்றுள்ள அனுபவத்தின் அடிப்படையில், தமிழ்ப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஆதரவு அவசியம் என்பதை நன்கு அறிகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

“இந்த ஒதுக்கீட்டின் மூலம், தமிழ்ப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு, தளவாடப் பொருட்கள், கற்பித்தல் உபகரணங்கள் மற்றும் கற்றல் பொருட்களை மேம்படுத்தி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவருக்கும் மிகவும் உகந்த மற்றும் வசதியான கற்றல் சூழலை உருவாக்க முடியும்.

“நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் நீண்டகால போராட்டத்திற்கான அங்கீகாரமாகவும் இது அமைகிறது. மேலும் இந்த ஒதுக்கீடு திறம்பட பயன்படுத்தப்படும்போது வசதிகளை மேம்படுத்த நிச்சயமாக உதவும்.