தொழிலாளர் சட்டக் கருத்தரங்கு 2014

Admin
படம் 1: மாநில இரண்டாம் துணை முதல்வர் வரவேற்புரையாற்றினார்.
படம் 1: மாநில இரண்டாம் துணை முதல்வர் வரவேற்புரையாற்றினார்.

பினாங்கு மாநிலத்தில் தொழில் நுட்ப ஆற்றல் மிக்க பணியாளர்கள் 30% மட்டுமே இருக்கின்றனர் எனத் தொழிலாளர் சட்டக் கருத்தரங்கு வரவேற்புரையில் குறிப்பிட்டார் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. மேலும் தொழிற்கல்வி சார்ந்த மையங்கள் அல்லது பள்ளிகள் அதிகரிக்க வேண்டும். அப்பொழுது தான் தொழில்நுட்ப காலத்திற்கு ஏற்ப வேலை வாய்ப்புகளைப் பூர்த்திச்செய்ய முடியும் என்றார். பினாங்கு மாநில மேம்பாட்டுத் தொழிற்கல்வி மையம்(PSDC) போன்ற தொழிற்கல்வி மையங்கள் அதிகரிக்க மாநில அரசு பல அரிய முயற்சிகள் எடுத்து வருகிறது. அவ்வகையில் பினாங்கு மாநிலத்தில் அமைந்திருக்கும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி வழங்கும் திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்றார்.
இந்தத் தொழிலாளர் சட்டக் கருத்தரங்கில் 80-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா தொழில்துறைகளிலிருந்து வருகையளித்தனர். மூன்றாவது முறையாக நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் ஏறக்குறைய 150 பங்கேற்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர். இந்தக் கருத்தரங்கில் மலேசிய சமூக பாதுகாப்பு அமைப்பு, தொழிற்பயிற்சி மையம் போன்ற அமைப்புகள் பற்றிய பட்டறை இடம்பெற்றது. இதன் மூலம் பங்கேற்பாளர்களுக்குத் தொழில்துறை, தொழிலாளர் பாதுகாப்பு, மற்றும் சலுகைகள் குறித்து கூடுதல் விபரங்கள் அளிக்கப்பட்டது. பினாங்கு மாநில மனித வள தொடர்புக் குழுவினர் இக்கருத்தரங்கைச் சிறப்பாக வழிநடத்தினர்.வரும் காலங்களில் அதிகமானப் பங்கேற்பாளர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொள்வர் என எதிர்ப்பார்ப்பதாக பினாங்கு மாநில மனித வள தொடர்புக் குழுத் தலைவரான டத்தோ அஜித் சிங் ஜேசி தெரிவித்தார்.