நாட்டின் முதல் வெண்ணிலா தோட்டம் பினாங்கில் உருவாக்கப்பட்டது- முதல்வர்

Admin

பெனந்தி – நம் நாட்டில் முதல் முறையாக
கெய்ரோஸ் வேளாண்மை நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட வெண்ணிலா தோட்டம், இங்குள்ள தாமான் அக்ரோ பெர்மாத்தாங் பாவில் ஆக்கப்பூர்வமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்பாக கருத்துரைத்த மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ், இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த ‘ஸ்மார்ட்’ தோட்டம் இம்மாநிலத்திற்கு அதிகமான விவசாயிகள் ஈர்க்கப்பட்டு உயர் தர மதிப்புள்ள விவசாயத்தை உற்பத்தி செய்ய வழிவகுக்கும் என்றார்.

KETUA Menteri dalam sidang media sini pada pagi tadi.

“மாநில அரசு ஒரு சிறிய நில பரப்பளவு கொண்ட பினாங்கில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, விவசாயிகளுக்கு அதிக மதிப்புள்ள பயிர்களை உற்பத்தி செய்ய உதவுவோம் என்று நம்புகிறோம்.

“விவசாயத்தில் தொழில்நுட்ப பயன்பாடுகளைப் பயன்படுத்துவது மிக அவசியமாகும். இது ‘ஸ்மார்ட்’ வேளாண்மை மூலம் வெண்ணிலா தோட்ட உருவாக்கம் இதனை சித்தரிக்கிறது.

“எனவே, கெய்ரோஸ் விவசாயத்தின் தொழில்முனைவோர் செயல்பாடு முதல் ‘ஸ்மார்ட்’ தோட்டமாகத் திகழ்கிறது,” என மலேசியாவின் முதல் ‘ஸ்மார்ட்’ வெண்ணிலா தோட்டத்தின் தொடக்க விழாவை இன்று நிறைவு செய்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

மாநில முதல்வரின் கூற்றுப்படி, சி.எம்.ஐ நிறுவனத்தின் மூலம் மாநில அரசிற்கு தற்போது தாமான் அக்ரோ பெர்மாத்தாங் பாவில் விவசாய நோக்கத்திற்காக சுமார் 22 ஏக்கர் நிலங்களைக் கொண்டுள்ளது.

SUASANA di ladang pintar Kairos Agriculture dengan dilengkapi sistem IOT, di sini

“ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் நோர்லெலா கூறிய விவசாயத் தொழில்நுட்பம் குறித்த பரிந்துரைகள் மாநில நம்பிக்கை கூட்டணி அரசின் மேம்பாட்டுத் திட்டங்களின் சாரமாகவும் திகழ்கிறது.

“எனவே, ஒரு சிறிய நில பரப்பளவைக் கொண்ட இம்மாநிலத்தில், மாநில அரசு தொழில்முனைவோருடன் இணைந்து விவசாயத்தை மேம்படுத்த செயல்படுவோம், ”என்று நிலம் & நில மேம்பாடு, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் இவ்வாறு விளக்கினார்.

இதனிடையே, பினாங்கு மக்களும் எதிர்கொள்ளும் கோவிட்-19 பாதிப்பினால் மாநில வேளாண்மை துறையில் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையை துரிதப்படுத்தப்படும் என்று மாநில முதல்வர் கூறினார்.

இதற்கிடையில், 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘ஸ்மாட்’ வெண்ணிலா தோட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரிம1.5 மில்லியன் வருவாய் கிடைக்கும் என்று
கைரோஸ் விவசாய செய்தித் தொடர்பாளரான தான்
கூன் ஹொக் கூறினார்.

“இப்போது, ​​கைரோஸ் வேளாண்மை தொழில்நுட்பம் பயன்படுத்தி நீர் பாய்ச்சல் செயல்படுத்தப்படும்.

“இந்த 2 ஏக்கர் நிலத்தில், சுமார் எட்டாயிரம் மர துண்டுகள் உள்ளன, பூக்கள் வளர இரண்டரை ஆண்டுகள் ஆகும், பழம் காய்க்க இன்னும் ஒன்பது மாதங்கள் ஆகும்.அதன் பிறகு, ஒவ்வொரு ஆண்டும், அது பலனைத் தரும்”, என மேலும் அவர் விளக்கினார்.

மேலும், வெண்ணிலா மற்றும் பிற கரிம காய்கறிகளை ஸ்மார்ட் வேளாண்மை செய்வதற்காக, கெய்ரோஸ் வேளாண்மைக்கு சி.எம்.ஐ.க்கு சொந்தமான நான்கு ஏக்கர் நில விண்ணப்பத்திற்கான ஒப்புதலையும் மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் தனது உரையில் அறிவித்தார்.