பத்து காவான் நாடாளுமன்ற வெற்றி மலேசியாவைக் காப்பாற்ற மக்கள் அளித்த அங்கீகாரம் – சாவ்

Admin

புக்கிட் தெங்கா – 15வது பொதுத் தேர்தலில் (GE15) பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியில் அதிகாரப்பூர்வமற்ற வெற்றியை, நாட்டைக் காப்பாற்றுவதற்காக மக்கள் அளித்த அங்கீகாரமாகக் கருதுவதாக சாவ் கொன் இயோவ் தெரித்தார்.

எனவே, பினாங்கு முதல்வருமான சாவ், பக்காத்தான் ஹராப்பான் மீது நம்பிக்கை வைத்ததற்காக அனைத்துக் தரப்பினர்களுக்கும் குறிப்பாக பத்து காவான் வாக்காளர்களுக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

“இந்தப் பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் பக்காத்தான் ஹராப்பான் (GE) மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தற்கு மிக்க நன்றி.

“இந்த 14 நாட்கள் நடைபெற்ற பிரச்சாரத்தில் என்னுடன் ஒன்றிணைந்து பத்து காவான் நாடாளுமன்ற தொகுதியின் கீழ் உள்ள மூன்று சட்டமன்ற உறுப்பினர்களான இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி(பிறை), கூய் சியோவ்-லியோங் (புக்கிட் தெங்கா) மற்றும் கோ சூன் அய்க் (புக்கிட் தம்புன்)
ஆகியோருக்கும் நன்றித் தெரிவிக்க விரும்புகிறேன்.

“இந்தத் தேர்தல் பிரச்சார காலகட்டம் முழுவதும் எப்பொழுதும் எங்களுடன் இருந்த ஆதரவாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கும் எல்லையற்ற பாராட்டுகள்.

“நான் முன்னதாக வலியுறுத்தியது போல, இந்து 15வது பொதுத் தேர்தல் என்பது சாவ் கொன் இயோவ் அல்லது பத்து காவான் நாடாளுமன்றம் பற்றியது மட்டுமல்ல, இது மலேசியாவைக் காப்பாற்றுவதற்கான உருமாற்றம் திட்டமாக அமைகிறது,” என்றார்.