பினாங்கில் 400 இளைஞர்கள் JBPP உறுப்பினராக நியமனம்

Admin

ஜார்ச்டவுன் – மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ்  பினாங்கு இளைஞர் அணி (JBPP) உறுப்பினர் நியமனக் கடிதத்தை அனைத்து 40 மாநில சட்டமன்றத் தொகுதிகளையும் (KADUN) உள்ளடக்கிய 400 பேருக்கு வழங்கினார்.

நில விவகாரம் & பொருளாதாரம் மற்றும் தகவல் தொடர்புகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் கொன் இயோவ் தனது உரையில், நியமிக்கப்பட்டவர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் மாநில அரசுடன் இணைந்து செயல்பட முடியும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

அனைத்து JBPP உறுப்பினர்களும் அந்தந்த தொகுதிகளில் ‘சிறிய பினாங்கு இளைஞர் மேம்பாட்டு வாரியமாக’ செயல்பட்டு சமூகநலனைப் பாதுகாக்க வேண்டும், என்றார்.

எனவே, பினாங்கின் 40 சட்டமன்ற தொகுதிகளிலும் 40 இளைஞர் அணி உருவாக்கப்படுகிறது. ஓர் இளைஞர் அணிவில் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் செயவை உறுப்பினர்கள் (7) என 10 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இது 2022,மே 1 முதல் 2023,டிசம்பர் 31 வரை பதவி காலம் அமலாக்கம் காண்கிறது.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சீ; பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம்; பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி; கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் ஹெங்; பினாங்கு இளைஞர்  மேம்பாட்டு வாரிய பொது மேலாளர் டாக்டர் கிவீ சாய் லிங் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சீ,  முதல்வர் சாவ் கொன் இயோவ் தலைமைத்துவத்தின் கீழ் JBPP இன் செயல்பாடுகள் ஊக்குவிக்கவும் அதனை செயல்படுத்தவும் ரிம2.5 மில்லியன் கூடுதல் நிதி ஒதுக்கீடு வழங்கியதற்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

சமூகத்தில் இளைஞர்களின் பங்களிப்பு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்த பினாங்கு இளைஞர் அணி அறிமுகம் கண்டது என   PYDC பொது மேலாளர் டாக்டர். கிவீ சாய் லிங் கூறினார். 

வேலை வாய்ப்பு, கல்வி, தலைமைத்துவப் பயிற்சி மற்றும் மேம்பாடு, தன்னார்வலர்கள், கலை மற்றும் கலாச்சாரம், மின்-விளையாட்டுகள் மற்றும் பல ஊக்கமளிக்கும் திட்டங்கள்  JBPP மூலம் செயல்படுத்தப்படும், என கூறினார். 

இந்த JBPP நியமனம் இளைஞர்களின் தலைமைத்துவத் திறமைகளை மேம்படுத்துவதோடு, அவர்களின் ஆற்றலை  வளர்க்கவும் முடியும்,” என்று அவர் விளக்கமளித்தார்