PIFC மேம்பாட்டு திட்டத்தில், வெள்ளை அறிக்கை தயாரிப்பில் தனியார் நிறுவனங்களின் மூலோபாய ஒத்துழைப்பு

Admin
c8db9d1a d569 4702 877c 3e8f0979aeaa

ஜார்ச்டவுன் – பினாங்கு அனைத்துலக நிதி மையம் (PIFC) அமைக்கும் முயற்சியை மாநில அரசு முன்னெடுத்து வருவதாக முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

மாநில அரசு இத்திட்டத்திற்கான வெள்ளை அறிக்கையைத் தயாரிப்பதற்காக ஆலோசகர்கள் குழுவை நியமிப்பதற்கான முழுச் செலவையும் ஏற்கும் மூன்று முக்கிய கட்டுமான நிறுவனங்களுடன் மூலோபாய ஒத்துழைப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள மூன்று மூலோபாய நிறுவனங்கள் Eastern & Oriental Berhad, IJM Corporation Berhad மற்றும் அதன் துணை நிறுவனமானQueens Island Financial District (QIFT) வாயிலாக Ideal Property Group ஆகியவை என்றும் அவர் தெரிவித்தார்.

நிதி, பொருளாதார மேம்பாடு மற்றும் நிலம், மற்றும் தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ், நியமிக்கப்பட்ட ஆலோசனை நிறுவனம் மூன்று மாதங்களுக்குள் கட்டாய வெள்ளை அறிக்கையைத் தயாரிக்கத் தொடங்கும் என்று கூறினார்.

“ஆசியான் சந்தையில் PIFC-ஐ முக்கிய நிதி மையமாக மேம்படுத்துவதற்கான மூலோபாய மற்றும் பொருளாதார அடிப்படைகளை முன்னிறுத்துவதே இந்த ஆவணத்தின் நோக்கம்,” என்று அவர் தெரிவித்தார்.

பினாங்கு அனைத்துலக நிதி மையம் (PIFC) தொடர்பான வெள்ளை அறிக்கையில் ஒழுங்குமுறை கட்டமைப்பு, வெளிப்படையான நிர்வாகம் மற்றும் அனைத்துலக நிதி நிறுவனங்களிடமிருந்து முதலீடுகளை ஈர்க்கும் போட்டித்தன்மை வாய்ந்த ஊக்கத் தொகுப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற 15-வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் நான்காவது பதவிக்காலத்தின் முதல் கூட்டத்தில், மாச்சாங் புபுக் மாநில சட்டமன்ற உறுப்பினர் லீ காய் லூன் எழுப்பிய துணைக் கேள்விக்கு சாவ் இவ்வாறு பதிலளித்தார்.

அதற்கு முன்னதாக, பாடாங் கோட்டா சட்டமன்ற உறுப்பினராகவும், பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள கோன் இயோ, PIFC வெள்ளை அறிக்கை மற்றும் மூலோபாய செயல் திட்டத்தில் சேர்க்கப்படவுள்ள முக்கிய கூறுகள் மற்றும் முக்கிய கொள்கை அங்கங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களை முழுமையாக ஒருங்கிணைக்க ‘முழு மாநில அணுகுமுறை’ பயன்படுத்தப்படுகிறது.

“PIFC போட்டியிடுவதற்காக உருவாக்கப்படவில்லை, மாறாக இது ஜோகூர், கோலாலம்பூர் மற்றும் லபுவானில் ஏற்கனவே உள்ள நிதி மண்டலங்களுக்கு ஒரு துணை முயற்சியாக அமைகிறது.

“புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர்
கூய் சியாவோ-லியுங் எழுப்பிய வாய்மொழிக் கேள்விக்குப் பதிலளித்தார்.

“பினாங்கின் பொருளாதார வலிமையை நிதிச் சேவைகள் புத்தாக்கத்தின் மூலம் ஒரு புதிய பொருளாதாரத் தூணாக மாற்றுவதை நாங்கள் விரும்புகிறோம்,” என்று மேலும் கூறினார்.