பினாங்கில் STEM பொறியியல் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

Admin


ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கம் திறன் மேம்பாட்டு ஏஜென்சிகளின் உதவியுடன் இடைநிலைப்பள்ளி கீழ்நிலை மாணவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகியவற்றில் மிகுந்த ஆர்வத்தை ஊக்குவித்து வருகிறது.

இதுபோன்ற ஏஜென்சிகள் மாணவர்களுக்கு STEM மீதான ஆர்வத்தை மேலோங்கச் செய்யும், என்றார்.

“அத்தகையப் பாடங்கள் பகுப்பாய்வு திறன்களை மேம்படுத்துகின்றன. அதோடு, அவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டவும் ஊக்கமளிக்கிறது.

எனவே, STEM பொறியியல் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
டத்தோ செல்வகுமார் தலைமையிலான பினாங்கு ஆயிர வைசியர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய மண்டபத்தில் வருகின்ற 21-5-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி தொடங்கி 12:00 மணி வரையில் நடக்கவிருப்பதாக பினாங்கு இரண்டாம் துணை முதலமைச்சர் பேராசிரியர் ப.இராமசாமி அறிவித்தார்.

இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ,அவர்களின் பொறியியல் கல்விக்கு உதவும் பொருட்டு பினாங்கு இந்து அறப்பணி வாரிய ஆணையரும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் தலைவருமான டத்தோ ச.செல்வகுமார் மாணவர்களுக்கான அறிவியல் தொழில்நுட்பக் கருத்தரங்கை இலவசமாக நடத்த முன்வந்துள்ளார்.

“STEM பாடங்கள் படிப்பதற்குச் சலிப்பை ஏற்படுத்தாது, எனவே பயப்பட வேண்டாம்,” என இளைஞர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என இராமசாமி கேட்டுக்கொண்டார்.

மாநில ஏஜென்சிகளான பினாங்கு அறிவியல் கிளஸ்டர், டெக் டோம் பினாங்கு, பினாங்கு கணித மையம். மற்றும் பினாங்கு திறன் மேம்பாட்டு மையம் (PSDC) ஆகியவை பள்ளிகளுக்கு உரிய வளங்களை அல்லது ஒதுக்கீடுகளை வழங்குகின்றன.

மாநில ஏஜென்சிகள் STEM கற்றலை சுவாரஸ்யமாக்க வேண்டும் மற்றும் இளைஞர்களிடையே ஆர்வத்தைத் தூண்டுவதற்குப் புதுமையான நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். அதே வேளையில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்க STEM பாடங்களை எடுக்க ஊக்குவிக்க முடியும் என்று இராமசாமி வலியுறுத்தினார்.

உயர்ந்த தொழில்நுட்ப உற்பத்திக்கான மையமாகத் திகழும் பினாங்கு மாநிலத்தின் மனித வளத் தேவையைக் கருத்தில் கொண்டு STEM திறன்களைக் கொண்ட அதிகமான தொழிலாளர்களை உருவாக்குவது அவசியமாகும்.

மாநில அரசாங்கம் STEM எதிர்காலச் சிந்தனை என்ற புதிய திறன் மேம்பாட்டு முயற்சியை அடுத்த மாதம் தொடங்கும் முன்னோடித் திட்டமாகத் தொடங்குகிறது என இராமசாமி
ஆயிர வைசியர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

மேலும், பினாங்கு STEM அமைப்பின் பொது மேலாளர் ரிச்சர்ட் சுங் ச்சொக் இன், ( Richard Chung Chok Yin,) பி.எஸ்.டி.சி (PSDC) தலைமை நிர்வாக அதிகாரி தான் எங் தோங் மற்றும் டெக் டோம் தலைமை நிர்வாக அதிகாரி கூ பூ வூய் ஆகியோர் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்தனர்.

இந்த முன்முயற்சியானது, எதிர்காலக் கல்விப் படிப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகளைக் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் தொடர படிவம் நான்கு, ஐந்து மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கூடுதல் பாடநெறி அடிப்படைக் கற்றலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதற்கிடையில், மாநிலத்திற்கு பொறியாளர்கள் மட்டுமல்ல, தொழில்நுட்ப வல்லுநர்களும் தேவை. ஒரு உற்பத்தி மையத்தில் பணிபுரியும் ஒவ்வொரு பொறியாளருக்கும், பல தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவைப்படுவதாக, தான் கூறினார்.

மாநிலத்திலுள்ள உற்பத்தியாளர்களுக்கு, குறிப்பாக மின் மற்றும் மின்னணுவியல் துறையில் எந்த மாதிரியான திறன் மிக்க தொழிலாளர்கள் தேவை என்பதைத் தீர்மானிக்க பி.எஸ்.டி.சி (PSDC) இப்போது ஓர் ஆய்வை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.