பினாங்குத் தீவு முழுவதும் புகைமூட்டம்

கடந்த ஜூன் மாதம் மலேசியாவில் ஊடுருவியப் புகைமூட்டம் பினாங்கு மாநிலத்தையும் ஆளத்தொடங்கியது. சாலையில் செல்லும் வாகனமோட்டிகள், வழிபோக்கர்கள் என அனைவரும் புகைமூட்டத்தால் மூச்சி திணறல் ஏற்பட்டு அவதியுற்றனர். பினாங்கில் முக்கிய சுற்றுலா தளமான குவான் இன் தெய்வ உருவ சிலை உள்ள இடமான அயர் ஈத்தாம் பகுதிகளில் முற்றிலும் புகைமூட்டம் சூழ்ந்து கொண்டதால் அங்கு அங்காடி வியாபாரிகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர் போன்ற மாநிலங்களில் புகைமூட்டத்தினால் அதிகமானோர் உடல்நிலை பாதிப்பு அடைந்ததோடு பல பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டன. பினாங்கில் மழை பெய்த போதிலும் காற்றின் தூய்மைகேடு 300- ஆக இருக்குமானால் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய பள்ளிகள் மூடப்பட வேண்டும் என லிம் குவான் எங் கேட்டுக் கொண்டார். இருந்தாலும், பினாங்கில் இந்நிலைமையை எதிர்கொள்ள அதிகமான முக பாதுகாப்பு கவசத்தைத் தயார்படுத்தி வைக்க பணித்திருப்பதாக பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் கூறினார்.

தொடர்ந்து நீடித்து வரும் புகைமூட்டத்தினால் இங்கு ஜெலுத்தொங் துறைமுக மீனவர்களின் வாழ்கைத்தரமும் வருமானமும் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. வழக்கம் போல் தங்களுக்குக் கிடைத்த வருமானம், புகைமூட்டத்தால் சரிந்து விட்டதாகவும், திசையெங்கும் சூழ்ந்திருக்கும் புகைமூட்டத்தால் கடலுக்குள் செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டிருப்பதாக ரஸ்மாட் ஓஸ்மான் என்ற மீனவர் தனது உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினார்.

பினாங்கு மாநிலத்தைச் சூழ்ந்த புகை மூட்டம்.
பினாங்கு மாநிலத்தைச் சூழ்ந்த புகை மூட்டம்.

 

 

 

 

 

 

 

 

 

 

புகைமூட்டத்தால் மலேசிய வாழ் மக்கள் பாதிப்புக்குள்ளாகுவதால் இச்செயலுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில முதல்வர் கேட்டுக் கொண்டார்.