பினாங்கு பயணிகள் படகு சேவை மேம்படுத்தப்படும் – முதல்வர்

Admin
மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ்

ஜோர்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தின் முக்கிய பொதுப் போக்குவரத்து மையமாக திகழும் பயணிகள் படகு சேவையை மேம்படுத்தவும் அதனை அதிகரிக்கவும் மாநில அரசு மேற்கொள்ளவிருக்கும், நடவடிக்கைகள் தொடர்பாக புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர் கோ சூன் அய்க் சட்டமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பினார்.

பினாங்கு பயணிகள் சேவை படகு
(மூலம்: இணையதளம்)

“இரபிட் ஃபெரி தனியார் நிறுவனத்தின்’ கீழ் செயல்படும் இப்படகு சேவையை ஒவ்வொரு நாளும் பாதசாரிகள், வாகனமோட்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிளோட்டிகளும் பயன்படுத்துகின்றனர். இவ்வாண்டு மே மாதம் தொடங்கி செப்டம்பர் வரை தத்தம் வாகனமோட்டிகள் (183,461), மோட்டார்சைக்கிளோட்டிகள் (334,706) மற்றும் பாதசாரிகள் (539,639) பயன்படுத்தியுள்ளதாக புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன.

பினாங்கு படகு சேவை வாரநாட்களில் ஒரு நாளைக்கு 54 முறையும் வார இறுதி மற்றும் பொது விடுமுறைகளில் 50 முறையும் சேவையை வழங்குகிறது. எனினும், இச்சேவையை அதிகரிக்க மாநில அரசு ‘இரபிட் ஃபெரியிடம்’ பேச்சு வார்த்தை நடத்தவிருப்பதாக ,” மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் சட்டமன்ற உறுப்பினருக்கு இவ்வாறு பதிலளித்தார்.

மேலும், நீர் வாடகைக்கார் திட்டத்தை அமல்படுத்த மாநில அரசு அதற்கானப் பல வழிகளை ஆராய்ந்து வருவதாகவும்
நில விவகாரம் & நில மேம்பாடு, போக்குவரத்து மற்றும் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் விளக்கமளித்தார். இதன்வழி, போக்குவாரத்து நெரிசலை குறைப்பதோடு பயணிகள் படகு சேசையை அதிகரிக்க வழிவகுக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.