பினாங்கு மாநிலத்தின் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் பிணைப்பையும் தொடர்ந்து பேண வேண்டும் – முதல்வர்

Admin

 

பந்தாய் ஜெராஜா – ஸ்பைஸ் அரங்கில் நடைபெற்ற பினாங்கு மாநில முதல்வரின் 2023 சீனப் புத்தாண்டு திறந்த இல்லத்திற்கு ஆயிரக்கணக்கான பொது மக்கள் திரண்டனர்.

மேலுன், பினாங்கு மாநில ஆளுநர், துன் அஹ்மத் ஃபுஸி அப்துல் ரசாக்; அவரது துணைவியார் தோ புவான் கத்திஜா முகமட் மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து, இந்த ஆண்டு முயல் ஆண்டு (சீன நாள்காட்டியின் படி), பினாங்கு முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் தொடர்புடைய விலங்குகளின் இயல்பான குணாதிசயங்களான சாமர்த்தியம், ஞானம், சுறுச்சுறுப்பு மற்றும் வேகம் ஆகியவை பினாங்கை உலகத்தின் பார்வையில் வைப்பதற்கான நோக்கத்தையும் பார்வையையும் தொடர அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இது தேசிய ரீதியில் பிரமிக்கும் குடும்பத்தை மையமாகக் கொண்ட பசுமை மற்றும் விவேக மாநிலத்தை உருவாக்கும் பினாங்கு2030 இலக்குக்கு வித்திடுகிறது.

“கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு மாநிலத்தில் எந்தத் தரப்பினரும் ஓதுக்கப்படாமல் பொருளாதார மற்றும் சமூகப் பொருளாதார மீட்சியில் மாநில அரசு கவனம் செலுத்துகிறது.

“எனவே, அனைத்து அரசு மற்றும் தனியார் துறைகள், அரசு சாரா நிறுவனங்கள், பல்வேறு சமூகம் சார்ந்த அமைப்புகள் மற்றும் இந்த மாநிலத்தின் அனைத்து மக்களும் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் தொடர்ந்து பேண வேண்டும். மாநிலம் மற்றும் சிறந்த தேசத்தின் வளர்ச்சிக்கு இது வழிவகுக்கும்,” என்று அவர் இன்று நடைபெற்ற சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் குறிப்பிட்டார்.

மேலும், மாநில சட்ட சபாநாயகர், டத்தோ லாவ் சூ கியாங்; மாநில அரசின் தலைமை நிர்வாக குழுவினர்; மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியினை மெருகூட்டினர்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நிலம் மற்றும் பொருளாதார மேம்பாடு மற்றும் தகவல்தொடர்புகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கொன் இயோவ் புதிய மலேசியாவை உருவாக்குவதில் புதிய அத்தியாயத்தைத் திறந்திருக்கும் அன்வாருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

“நாட்டிற்கும் குறிப்பாக பினாங்கு மாநிலத்திற்கும் ஒரு புதிய உருமாற்றத்தை நோக்கி பயணிக்க புதிய தொலைநோக்கு மற்றும் கொள்கையை நானும் மாநில அரசின் தலைமையும் ஆதரிப்போம்.

“அன்வாரின் விரிவான பின்னணி மற்றும் அனுபவம், பிரதமரின் தலைமைத்துவத்திற்கு மலேசியா முழுவதற்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வல்லது,” என்று பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் கூறினார்.

இதற்கிடையில், பினாங்கு மாநில அரசு இம்மாநிலத்தின் தொழில், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் தொடர்பான பிரச்சனைகளில் கூடுதல் கவனம் செலுத்தி பினாங்கை வெற்றிகரமாக இயக்கியதற்காக பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

 

இந்த சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உச்சரிப்பு ‘லோர் சாங்’ மற்றும் பல்வேறு சிறப்புமிக்க கலாச்சார நிகழ்ச்சிகளுடன் தொடக்க விழாக் கண்டது.

இந்நிகழ்ச்சியில், பல்வேறு உணவு வகைகள் பரிமாறப்பட்டதுடன், விழாவின் முடிவில், மாநில முதல்வர் அங்கிருந்த குழந்தைகளுக்கு ‘பண்டிகை பணம்’ வழங்கினார்.