புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவை தொடந்து சமயம் & சமூகநலன் சார்ந்த நிகழ்வுகள் வழிநடத்தும் – தர்மன்.

 

ஜார்ச்டவுன் – மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவையின் சமூகநல பிரிவின் ஏற்பாட்டில் வசதி குறைந்த குடும்பத்திற்கு பரிசுக்கூடை அன்பளிப்பாக  வழங்கப்பட்டன. சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 10 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

சமூகநல மைய அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு  புலாவ் திக்கூஸ் சட்டமன்ற உறுப்பினர் கிரிஸ்தபர் லீன் சுன்  கிட் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார். நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நான்கு சக்கர நாற்காலியும் சட்டமன்ற உறுப்பினர் எடுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவையின் தலைவர் விவேக நாயகன் திரு தர்மன், இவ்வட்டார சமூகநலப் பிரிவின் தலைவர் திரு தேவேந்திரன் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற ஆதரவளித்த முத்தியாரா உணவு வங்கி மற்றும்  ‘Eden Handicap’-க்கும் நன்றி நவிழ்ந்தார் விவேக நாயகன் திரு தர்மன்.

மேலும், இவ்வட்டாரத்தில் தொடர்ந்து பல சமூகநலன் மற்றும் சமயம் சார்ந்த  நிகழ்வுகள் நடத்தப்படும் என திரு தர்மன் உறுதியளித்தார். இந்து சங்கம் சமயம் சார்ந்த நிகழ்வுகள் மட்டுமின்றி சமூகநல முன்னேற்றத்திற்கும் பல நிகழ்வுகள் வழிநடத்தும் என்றால் மிகையாகாது.