பொங்கல் விழா பாரம்பரியத்தை பறைச்சாற்றுவதோடு நல்லிணக்கத்தையும் பேணுகிறது

Admin
புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர் கூயி சிவூவ் லியோங் வெற்றியாளருக்குப் பரிசு எடுத்து வழங்கினார்.(உடன் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்துரி பட்டு)

புக்கிட் தெங்கா புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர் கூயி சிவூவ் லியோங்  பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்துரி பட்டு ஆகியோரின் இணை ஏற்பாட்டில் ஶ்ரீ மங்கள நாயாகி அம்மன் ஆலயத்தில் பொங்கல் விழா மிக பிரமாண்டமாக  நடைபெற்றது.
நமது பாரம்பரிய இசையான மேளத்தாளம்  வாசிக்கப்பட்டு பிரமுகர்களை ஆலய நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வரவேற்று பிரமுகர்களுக்குச் சிறப்பு செய்யப்பட்டது. பிரமுகர்கள் குத்து விளகேற்றி நிகழ்வை தொடக்கி வைத்தனர்.

இந்த நிகழ்வை முன்னிட்டு மலேசிய குற்றத்தடுப்பு அறவாரியத்தின் மாநில துணைத் தலைவர் டத்தொ புலவேந்திரன் சட்ட மன்ற உறுப்பினர் கூயி சிவூவ் லியோங், நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி ராணி பட்டு ஆகியோர் சிறப்பு வருகையை மேற்கொண்டார்.

இந்தியர்களின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பறைச்சாற்றும் வகையில் இப்பொங்கல் விழாவில் பொங்கல் வைக்கும் போட்டி ,பானை உடைத்தல், இசை நாற்காலி ,கயிறு இழுக்கும் போட்டி போத்தலில் நீர் நிரப்புதல், வண்ணம் தீட்டும் போட்டி, பூ தொடுத்தல், ஊசி மீது நூல் பொருத்தும் போட்டி  என பல நிகழ்வுகள் நடைபெற்றன.
பொது மக்கள் சுகாதாரத்தை பேண வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இலவச மருத்துவ பரிசோதனையும் இடம்பெற்றது.

சிறியவர் முதல்  பெரியவர் வரை சுற்று வட்டாரத்திலுள்ள பொது மக்கள்  போட்டி விளையாட்டுகளில் பங்குக் கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். வெற்றிப் பெற்ற பங்கேற்பாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. வருகையாளர்களின் கண்ணுக்கு விருந்தாக கலாச்சார நடனங்களும் நடைபெற்றதோடு விருந்துதோம்பலிலும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.