மலேசிய தின காற்பந்து போட்டி சமூக ஒற்றுமையை வலுப்படுத்துகிறது

Admin
fb img 1791789648711

ஜார்ச்டவுன் – மலேசிய தினத்தை முன்னிட்டு, பத்து உபான் கிராம சமூக நிர்வாகக் கழகம் (எம்.பி.கே.கே) மற்றும் பினாங்கு மாநகர் கழகத்தின் (எம்.பி.பி.பி) உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட மாண்புமிகு குமரேசன் வெற்றிக்கிண்ணத்திற்கான மலேசிய தின காற்பந்து போட்டி, சமூக ஒற்றுமையையும் நல்லுறவையும் வலுப்படுத்தும் தளமாக அமைந்தது.

fb img 1791865267747

பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் கூறுகையில், சமூக அளவில் நடத்தப்படும் விளையாட்டு நிகழ்ச்சிகள் வெற்றியை மட்டும் இலக்காகக் கொண்டவை அல்ல என்றும், அவை சமூகத்தை ஒன்றிணைப்பதுடன், இளைஞர்கள் ஆரோக்கியமான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்துகின்றன என்றார்.
fb img 1791865238413

“இத்தகைய போட்டிகள் மைதானத்தில் வெற்றி பெறுவதைவிட மேலான அர்த்தத்தைக் கொண்டுள்ளன. விளையாட்டு சமூகத்தை ஒன்றிணைக்கிறது, குடியிருப்பாளர்கள் இடையிலான உறவை வலுப்படுத்துகிறது. குறிப்பாக, இளைஞர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது,” என்றார்.
fb img 1791865256531

இதனிடையே, பத்து உபான் பொது மைதானத்தை மேம்படுத்துவது தொடர்பாக எம்.பி.பி.பி-யிடம் தாம் கோரிக்கை விடுத்துள்ளதாக குமரேசன் தெரிவித்தார்.

மைதானத்தில் உள்ள தற்போதைய வசதிகளை மேம்படுத்தி, மக்கள் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் பாதுகாப்பாகவும் வசதியாகவும் ஈடுபடும் வகையில் அவற்றை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும், என்றார்.
fb img 1791865230540

மேலும், பத்து உபான் மக்கள் இரண்டு ஃபுட்சல் கோல் கம்பங்கள் அமைத்துத் தருமாறு முன்வைத்த கோரிக்கைக்கு தாம் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“குறிப்பாக, இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபடவும், நட்புறவை வளர்த்துக்கொள்ளவும், தங்களது நேரத்தைப் பயனுள்ள நடவடிக்கைகளில் செலவிடவும் இந்த மைதானம் தொடர்ந்து பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்களது நோக்கம்,” என்றார்.

இப்போட்டியை முன்னிட்டு, பினாங்கு காற்பந்து கழக (Penang FC) அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவினரும் கலந்து கொண்டு, பத்து உபான் சமூகத்திற்கு தங்களது ஆதரவை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் எம்.பி.பி.பி கவுன்சிலர் மணிமாறன் கலந்து கொண்டார்.

இப்போட்டியைச் சிறப்பாக ஏற்பாடு செய்த எம்.பி.கே.கே பத்து உபான் தலைவர் ரோஸ்மான் ரஹிம் மற்றும் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களுக்கும் குமரேசன் பாராட்டு தெரிவித்தார்.

“அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து குழுவாகச் செயல்படும்போது இதுபோன்ற சமூக நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்த முடியும். விளையாட்டு நம்மை ஒன்றிணைக்கிறது; சமூக ஒற்றுமை நம்மை வலுப்படுத்துகிறது,” என்றார்.