முத்துச் செய்திகள் 5.0 மாநில அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும்

90cfef23 a75f 402e 9fcf 066b7e6a0a9c

புக்கிட் மெர்தாஜாம் – முத்துச் செய்திகள் தினம் 5.0 தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட நிகழ்ச்சி, பொதுமக்களையும் அரசாங்க நிறுவனங்களையும் ஒன்றிணைத்ததுடன், அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் தளமாகவும் அமைந்தது.

5c78fa0d 9c21 4c48 ac7d f4b686cd6207

இந்நிகழ்ச்சியின் வாயிலாக அரசாங்கம் மக்களுக்கு நேரடியாகத் தகவல்களை வழங்குவதுடன், அவர்களுடன் இருவழித் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.

img 20260906 wa0273

“அரசாங்கம் மக்களுக்கு தகவல்களை வழங்குவதுடன் மட்டுப்படாமல், மக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். அவர்களின் குரலுக்குச் செவிசாய்த்து, வழங்கப்படும் ஒவ்வொரு சேவையும் அவர்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்,” என்று பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

img 20260906 wa0278

இங்குள்ள ஜாலான் பெத்தெக், எம்.பி.எஸ்.பி. விளையாட்டு வளாகத்தில் இன்று நடைபெற்ற முத்துச் செய்திகள் 5.0 தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
img 20260906 wa0288

மக்களிடம் நேரடியாகச் சென்று அவர்களுடன் தொடர்புகொள்ளும் இந்த அணுகுமுறை, பினாங்கு மாநில அரசாங்கத்தின் பினாங்கு2030 தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
20260906 154755

இந்த ஆண்டு முத்துச் செய்திகள் தினம், மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு (JBPM) முக்கியத்துவம் அளித்து நடத்தப்பட்டுள்ளதால் தனிச்சிறப்பு பெற்றுள்ளது. JBPM இந்த ஆண்டு தனது 50ஆவது ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடுகிறது.
img 20260906 wa0167

“இந்த ஐந்து தசாப்தங்கள் வெறும் எண்ணிக்கை அல்ல. மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதில் தீயணைப்பு வீரர்கள் ஆற்றிய 50 ஆண்டுகால அர்ப்பணிப்பு, துணிவு, தியாகம் மற்றும் விசுவாசத்தை இது பிரதிபலிக்கிறது,” என்றார்.

img 20260906 wa0216

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பணி தற்போது தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு அப்பால் விரிவடைந்துள்ளதாக சாவ் கூறினார். மீட்பு நடவடிக்கைகள், பேரிடர் மேலாண்மை, தீத்தடுப்பு, பாதுகாப்புக் கல்வி மற்றும் பல்வேறு அவசரநிலைகளை எதிர்கொள்வதற்கான தயார் நிலை உள்ளிட்ட முக்கியப் பணிகளிலும் JBPM ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
img 20260906 wa0217

இதனிடையே, ஜூன் 2010ஆம் ஆண்டு அச்சு வடிவில் முதன்முதலாக வெளியிடப்பட்ட முத்துச் செய்திகள், பினாங்கு மக்களுக்கு மாநில அரசாங்கத்தின் கொள்கைகள், முன்னெடுப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பான தகவல்களை வழங்கும் முக்கியத் தொடர்பு ஊடகமாக விளங்கி வருவதாக சாவ் கூறினார்.
img 20260906 wa0315

முத்துச் செய்திகள் நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டு வருவதுடன், பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் சமூக நிகழ்ச்சிகள் வாயிலாக அரசாங்கத்தையும் மக்களையும் நெருக்கமாக்கும் தளமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

img 20260906 wa0155

முந்தைய மூன்று முத்துச் செய்திகள் தின நிகழ்ச்சிகள் பினாங்கின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டதுடன், கடந்த ஆண்டு நான்காவது பதிப்பு மலேசிய அரசக் கடற்படையுடன் (TLDM) இணைந்து நடத்தப்பட்டது. இந்நிலையில், முத்துச் செய்திகள் 5.0 நிகழ்ச்சி இம்முறை JBPM உடன் இணைந்து தனித்துவமான அணுகுமுறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சி, முத்துச் செய்திகள் மக்களுக்கான தகவல் தொடர்பு ஊடகம் என்பதை வலியுறுத்துவதுடன், மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதில் JBPM ஆற்றிவரும் பங்கை பொதுமக்கள் நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

பினாங்கு பாதுகாப்பான, வலிமையான மற்றும் எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளத் தயாரான மாநிலமாகத் தொடர்ந்து விளங்குவதை உறுதி செய்வதற்காக, JBPM, தன்னார்வத் தீயணைப்புப் படையினர் மற்றும் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுடனான ஒத்துழைப்பை மாநில அரசாங்கம் தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும் சாவ் உறுதியளித்தார்.

முத்துச் செய்திகள் 5.0 நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்துழைத்த மாநில அரசாங்கத் தகவல் பிரிவு, JBPM, அரசாங்கத் துறைகள் மற்றும் நிறுவனங்கள், உள்ளாட்சி அதிகாரிகள் (PBT), சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் மூலோபாயப் பங்காளிகள் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வர்த்தகம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் கோ சூன் அய்க், ஊராட்சி, நகர் மற்றும் புறநகர் திட்டமிடல் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் ஹெங் மூய் லாய், மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் துணை தலைமை இயக்குநர் (செயற்பாடுகள்) டத்தோ ஹஜி நோர்டின் பின் பௌஸி, எம்.பி.எஸ்.பி. மாநகர மன்ற மேயர் டத்தோ படேருல் அப்துல் அமின் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.