ஷான் ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் விழா

ஷான் ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் விழாக் கொண்டாடப்பட்டது.

மலேசிய இந்து சங்கம் புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவை மகளிர் பிரிவு ஆதரவுடன் ஷான் ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

இந்தப் பொங்கல் விழா மூன்றாவது ஆண்டாக ஷான் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாடுவதாக மலேசிய இந்து சங்க பினாங்கு கிளை துணைத்தலைவர் திரு தர்மன் தெரிவித்தார். மேலும் இவ்விழா வருடாந்திர நடவடிக்கையாகத் தொடர்ந்து கொண்டாடப்படும் என்றார்.

இந்தியர்களின் கலாச்சாரத்தைப் பறைச்சாற்றும் வகையில் கோலம் வரைதல், கருப்புச் சாப்பிடுதல் மற்றும் நடனம் ஆடுதல் ஆகியப் போட்டிகள் ஷான் இல்லக் குழந்தைகளுக்காகப் பிரத்தியேகமாக நடத்தப்பட்டன. வெற்றிப் பெற்ற குழந்தைகளுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன” என மவுன் எஃஸ்கிரின் வட்டாரத்தில் அமைந்துள்ள ஷான் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் நடைப்பெற்ற பொங்கல் விழாவில் கூறினார்.

இந்நிகழ்வில் மலேசிய இந்து சங்க பினாங்கு மாநில தலைவர் திரு முனியாண்டி, ஷான் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத் தலைவர் டத்தோ டாக்டர் பாலகிருஷ்ணன், மற்றும் இந்து அறப்பணி வாரிய ஆணையர் திரு காளியப்பன் கலந்து கொண்டார்.

இந்து சங்க மகளிர் அணி ஷான் காப்பக குழந்தைகளுடன் இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.

ஆண் பிள்ளைகள் கரும்பு சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்டனர்

தொடர்ந்து பல ஆண்டுகளாக ஷான் ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் விழா கொண்டாடும் மலேசிய இந்து சங்க பினாங்கு புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவைக்கு திரு பாலகிருஷ்ணன் நன்றிக் கூறினார். இம்மாதிரியான கொண்டாட்டத்தின் வாயிலாக இக்குழந்தைகள் சமூக உறுப்பினர்களுடன் தொடர்புக் கொள்ளவும் தன்னம்பிக்கை வளர்க்கவும் தூண்டுக்கோலாகத் திகழ்கிறது” என்றார்.

இந்தக் காப்பகத்தில் குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் பொருட்டு கல்விக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. எனவே, இலவசமாக பிரத்தியேக வகுப்புகள் நடத்தப்படும். ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவசமாகக் கல்வி போதிக்க விரும்பும் ஆசிரியர்கள் ஷான் காப்பகத்தைத் தொடர்புக் கொள்ளுமாறு 04-229 2186 அழைக்கப்படுகின்றனர் .