282 விண்ணப்பதாரர்களுக்கு மெகார் சாரி மலிவு விலை வீடுகளுக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.

மெகார் சாரி மலிவு விலை வீடுகளுக்கான அனுமதி கடிதம் பெற்ற விண்ணப்பதாரர்களுடன் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ.

பெர்தாம் பினாங்கு மாநில உள்ளூராட்சிவீடமைப்புநகரம் மற்றும் நாடு திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ மெகார் சாரி வீடமைப்புத் திட்டத்தில் குறைந்தநடுத்தர மற்றும் மலிவு விலை வீடுகள் பெற்ற 282 விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி கடிதம் வழங்கினார்.

பினாங்கு மாநிலத்தில் நம்பிக்கை கூட்டணி அரசு கடந்த 14-வது பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சிப்பீடம் அமைத்த 100 நாட்கள் கொண்டாட்டத்தை முன்னிட்டு இம்மாநிலத்தில் 29,000 யூனிட் மலிவு விலை வீடுகள் பொது மக்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

இதன் வழி மாநில அரசு பொது மக்களுக்கு அதிகமான குறைந்தநடுத்தர மற்றும் மலிவு விலை வீடுகள் வழங்குவது சித்தரிக்கப்படுகிறது. இம்மாநிலத்தில் நிர்மாணித்த, நிர்மாணித்துக் கொண்டிருக்கும் மற்றும் நிர்மாணிக்கப்படும் மலிவு விலை வீடுகள் ஏறக்குறைய 80,000 யூனிட் வீடுகள் உள்ளடங்கும். மாநில அரசு மலிவு விலை வீடமைப்புத் திட்டம் மேற்கொள்வதில் தனியார் வீடமைப்பு மேம்பாட்டாளர்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் அதிகமான மலிவு விலை வீடுகள் நிறுவ முடிகிறது. இதற்குச் சான்றாக தனியார் மேம்பாட்டு நிறுவனம்(உன்சா) நிர்மாணித்த மெகார் சாரி வீடமைப்புத் திட்டம் திகழ்வதாகடத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் சிங் மெசார் சாரி அடுக்குமாடி குடியிருப்பு பொது மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு இவ்வாறு கூறினார்.

மெகார் சாரி வீடமைப்புத் திட்டத்தில், ‘Hunza Properties Berhad’ நிறுவனத்துன் துணை நிறுவனமான ‘Tetuan Bandar Kepala Batas Sdn. Bhd ‘ கீழ் 141 மலிவு விலை வீடுகள் மற்றும் 141 நடுத்தர மலிவு விலை வீடுகள் கட்டப்பட்டுள்ளனHunza Properties Berhad’ மேம்பாட்டு நிறுவனம் மலிவு விலை வீடுகள் நிர்மாணித்து விற்பனைச் செய்யும் கொள்கையைப் பிற தனியார் மேம்பாட்டு நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

செபராங் பிறை நகராண்மைக் கழக ஊழியராகப் பணிப்புரியும் திரு சிவகுமார்,31 குறைந்த மலிவு விலை வீடு பெற்றதற்கு மாநில அரசிற்கு நன்றிக் கூறினார். கடந்த 5 வருடத்திற்கு முன்னதாக மலிவு விலை பெறும் பொருட்டு மாநில வீடமைப்பு அலுவலகத்தில் பதிவுச் செய்ததாக முத்துச்செய்திகள் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். சொந்த வீடு வாங்கும் தனது நீண்ட நாள் கனவு நிறைவுப்பெற்றதாகக் கூறினார்.