64வது பிறந்தநாளில் மலேசியாவின் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி பயணம் – சாவ்

Admin

*Quote*
அர்த்தமுள்ள பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு நன்றி. சிறந்த மலேசியாவுக்கான எங்கள் போராட்டத்தைத் தொடர உங்கள் ஆதரவிற்கும் நன்ற

பிறை – மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் இன்று காலை தனது 64வது பிறந்தநாளை தனது நண்பர்கள், ஆதரவாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் கொண்டாடினார்.

முதல்வருக்கு நான்கு பிறந்தநாள் அணிச்சகள் வெட்டி, அவர் மக்களுடனான புகைப்பட படத்தொகுப்பு மற்றும் ஊடகவியலாளர்களின் அழகான பிறந்தநாள் செய்திகள் அடங்கிய அர்த்தமுள்ள பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

பிறை, தாமான் சாய் லெங் பார்க்கில் உள்ள பத்து காவான் நாடாளுமன்ற பக்காத்தான் ஹராப்பான் நடவடிக்கை மையத்தில் எளிமையான முறையில் இக்கொண்டாட்டம் நடைபெற்றது.

ஹராப்பான் சின்னத்திற்கு அருகில் ‘X’ என குறியிடுவதற்கு முன், மலேசியாவிற்கு பிரகாசமான எதிர்காலம் அமைய வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

முன்னதாக, வாக்காளர்கள் ஜனநாயக ஆட்சி அமைக்க வழங்கிய அதிகாரத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் (Sheraton Move) மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது என்பது மறுப்பதற்கில்லை.

வாக்காளர்கள் மீண்டும் ஒருமுறை நம்பிக்கை கூட்டணிக்கு(Pakatan Harapan) வாக்களித்து தங்கள் அரசியல் உறுதிப்பாட்டை அர்ப்பணிக்குமாறு அனைத்து மலேசியர்களையும் கேட்டுக் கொள்கிறேன், என்றார்.

“மக்கள் தங்களது கடமையை ஆற்றி சிறந்த மலேசியா உருவாக்க வாக்களிக்க வேண்டும்.

“எங்கள் அரசியல் போராட்டத்தின் நீண்டப் பயணம் மிகவும் சவாலானது. மக்களின் ஆதரவைப் பெறுவோம்,” என நம்பிக்கைத் தெரிவித்தார்.

தகுதியுள்ள வாக்காளர்கள் 15வது பொதுத் தேர்தலில் வாக்களிப்பதில் மிகவும் தீவிரம் கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

“நம் குழந்தைகள் மற்றும் நம் நாட்டின் எதிர்காலத்திற்காக நாம் சிந்தித்து முடிவுச் செய்ய வேண்டும். ஒரு முரண்போக்கான அரசாங்கம் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்,” என்று பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான சாவ் மேலும் கூறினார்.

மேலும், பிறை சட்டமன்ற உறுப்பினரான இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ப. இராமசாமி, புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர் கோ சூன் ஐக், புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர் கூய் சியாவ்-லியுங் மற்றும் பத்து காவான் பக்காத்தான் ஹராப்பான் பிரச்சார இயக்குனர் டேவிட் மார்ஷல் ஆகியோர் இந்த செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பினாங்கில் உள்ள பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் பிறை மக்களுக்கு வீடுகள் மற்றும் வெள்ள நிவாரணத் திட்டங்களை உள்ளடக்கிய பல முன்னெடுப்புத் திட்டங்களைச் செயல்படுத்தியது என இராமசாமி கூறினார்.

புக்கிட் தம்புனில் ஹராப்பானுக்கு அளிக்கப்பட்ட ஆதரவு ஊக்கமளிப்பதாக இருப்பதாக, கோ கூறினார்.

“முதன்முறை வாக்களிப்பவர் மற்றும் தகுதியுள்ள இளம் வாக்காளர்கள் திறன் மிக்க அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.

“நாட்டை நிர்வகிக்க ஆற்றல் அற்றவர்களைத் தொடர்ந்து நிர்வகிக்க விடாதீர்கள். இது நமது அன்புக்குரிய நாடு, அதன் எதிர்காலத்தை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இந்தத் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் விபரங்கள் குறித்த மேல் விபரங்கள் பற்றி அறிய பக்காத்தான் ஹராப்பானின் சமூக ஊடகப் பக்கங்களைப் பின்தொடருமாறு மக்களை வலியுறுத்தினார்.

பத்து காவானில் சாவின் வேட்புமனுவை மக்கள் செபராங் பிறைக்கு ஒரு பெரிய ஊக்கமாகப் பார்க்கிறார்கள் என்று கூய் கூறினார்.

டேவிட் மார்ஷல் கூறுகையில், ஹராப்பானைப் பற்றி பெரும்பாலான மக்கள் அறிவர், ஆனால் சிலருக்கு கூட்டணி சின்னத்தை அறிவதில் சிரமம் இருக்கிறது, என்றார்.

“நாங்கள் மக்களை ஈடுபடுத்துவதற்காக பல பிரச்சாரங்கள், குழு விவாதங்கள், பரப்புரைகள் மற்றும் சந்திப்புக் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளோம்,” என்றார்.