கல்வி
முதன்மைச் செய்தி
“மாணவர்கள் வளமான, பசுமையான, பாதுகாப்பான மற்றும் முன்னேற்றமிக்க மாநிலத்தை உருவாக்க பினாங்கில் சேவையாற்ற வேண்டும்” – முதல்வர்
பினாங்கு மாநில அரசு வழங்கும் மாணவர்களுக்கான உயர்க்கல்வி ஊக்கத்தொகை பெற்றோர்களுக்குப் பொருளாதார சுமையைக் குறைப்பதோடு மட்டுமின்றி மாணவர்களின் செலவினங்களுக்கும் உதவியாக அமைவதாக முதல்வர் மேதகு லிம் குவான் எங் தெரிவித்தார். இதனை வடகிழக்கு மாவட்டத்தில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலை வழங்கும் நிகழ்வில் முதல்வர் தெரிவித்தார். மலேசியாவில் அமைந்துள்ள உயர்க்கல்வி நிலையங்களில் பயிலும் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற மாணவர்கள், எதிர்காலத்தில் பினாங்கு மாநிலத்திற்கு மீண்டும் வருகையளித்து பணிப்புரிய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்....