தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
மிதிவண்டியின் மூலம் உடற்பயிற்சி பினாங்கு மக்களுக்கு முதல்வர் ஊக்குவிப்பு
பினாங்கு மாநிலத்தின் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தும் பொருட்டு மாநில அரசு கையாண்டு வரும் உத்திகளின் ஒரு கூறுதான் மிதிவண்டிப் பயன்பாடாகும். மிதிவண்டி ஓட்டுதல் உடற்பயிற்சிகளில் ஒன்றாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் சிறந்ததொரு போக்குவரத்துச் சாதனமாகவும் திகழ்கிறது என்றால் அது மிகையாகாது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், மக்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துப் பொதுப் போக்குவரத்து வசதிகளையும் பிற போக்குவரத்து முறைகளையும் பயன்படுத்த மாநில அரசாங்கம் ஊக்குவித்து...