பல்லின மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் – முதல்வர்

Admin

புக்கிட் தெங்கா – மூன்றாவது முறையாக புக்கிட் தெங்கா சட்டமன்ற சேவை மையத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா ஜுரு, மதுரை வீரன் ஆலயம்; புக்கிட் தெங்கா, மங்கள நாயகி அம்மன் ஆலயம்; கம்போங் டோக், ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம்; தாமான் மாங்கா, ஸ்ரீ மஹா தேவி கருமாரியம்மன் ஆலயம் மற்றும் ஜுரு, ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய இணை ஏற்பாட்டில் இன்று சிறப்பாக நடைபெற்றது.

“பொங்கல் பண்டிகை இந்திய சமூகத்தினரால் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், இந்தப் பாரம்பரிய கொண்டாட்டத்தில் பங்கேற்கும் பல்வேறு இனங்களின் வருகையால் இப்பண்டிகை இன்னும் குதுகலமாகிறது.

“இம்மாதிரியான கொண்டாட்டத்தின் தனித்துவமும் வலிமையும் நம் அனைவருக்கும் பெருமையைச் சேர்க்கிறது.

“இந்தப் பொங்கல் விழா உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பிற இனங்களின் கலாச்சாரத்தை மதிப்பதற்கும், மேலும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கும் ஒரு தளமாக விளங்குகின்றது.

 

“தேசிய ரீதியில் பிரமிக்கும் குடும்பத்தை மையமாகக் கொண்ட பசுமை மற்றும் விவேக மாநிலத்தை உருவாக்கும் பினாங்கு2030 இலக்கிற்கு ஏற்ப, இந்த ‘தை’ மாதத் தொடக்கம், மக்களுக்கும் இந்த மாநிலத்திற்கும் பலமாகவும் வழிகாட்டியாகவும், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேலும் அதிகரிக்கும்,” என பினாங்கு மாநில முதல்வரும் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான மேதகு சாவ் கொன் இயோவ் ஸ்ரீ மங்களநாயகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் தமதுரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதனிடையே, தமிழ்ப்பள்ளிகள், ஊடகங்கள், கோவில்கள் ஆகியவை ஒற்றுமையை உருவாக்குவதற்கும், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை எதிர்கால சந்ததியினர் அனுபவிக்கும் வகையில் கொண்டு செல்வதற்கும் மிக முக்கியமான தளங்கள் மற்றும் நிறுவனங்களாக செயல்பட வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டார்.

இந்தக் கலாச்சாரத்தின்
பன்முகத்தன்மை நாம் ஒருவருக்கொருவர் அங்கீகரிக்கும் போது இந்தக் கொண்டாட்டம் மிகவும் அர்த்தமுள்ளதாகிறது.

பொங்கல் பானையில் பால் பொங்கி வலிவது போல நம் வரும்காலங்களில் அதிகமான வளர்ச்சியையும் மேம்பாட்டினையும் எதிர்ப்பார்ப்போம் என பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் சாவ் நம்பிக்கை தெரிவித்தார்.

முதல்வரும் மற்றும் புக்கிட் தெங்கா
சட்டமன்ற உறுப்பினருமான கூய் சியாவ் லியோங்,
பொங்கல் பானையில் பால் ஊற்றி பொங்கல் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

மேலும், நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கிய புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர் கூய், இக்கொண்டாட்டத்தின் மூலம் பல்லின மக்களிடையே ஒற்றுமை வலுவடையச் செய்கிறது, என்றார். 15-வது பொதுத் தேர்தலில் வெற்றிப்பெற உதவிய அனைத்து வாக்காளர்களுக்கும் தனது நன்றியையும் பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

பொங்கல் கொண்டட்டத்தில் மயில் ஆட்டம் இடம்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் பொங்கல் வைக்கும் போட்டி, சிறுவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி, உறி அடித்தல் மற்றும் இதர போட்டிகளும் இடம்பெற்றன. இதில் நூற்றுக்கணக்கான சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை மெருகூட்டினர்.