வருங்கால தலைமுறைக்காக சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் – ரோசாலி

புக்கிட் தம்புன் – பூமி மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது  ஒரு தனிநபரின் கடமை மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்த சமூகத்தின்  பொறுப்பாகும்.

செபராங் பிறை மாநகர் கழகத் (எம்.பி.எஸ்.பி) தலைவர் மேயர், டத்தோ ரோசாலி மொஹமட் இன்று காலை பினாங்கு ஃப்ளெக்ஸ் நிறுவனம்  ஏற்பாட்டில் நடைபெற்ற 2021 உலக பூமி தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டபோது  இதனைத் தெரிவித்தார்.

பூமியைப் பாராட்டும் முயற்சியாகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் அது சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடவும் சமூகத்தில் பொறுப்புணர்வு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக இந்த விழா நடைபெற்றது, என்றார்.

“அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பதற்கான  பொறுப்புகளை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

“மேலும், எதிர்கால தலைமுறையினருக்கு முயற்சிகள் மற்றும் பங்களிப்புகள் ஒன்றாக பசுமையான வாழ்க்கை முறையை பின்பற்றுவது இதில் அடங்கும், ” என்று அவர் நிகழ்ச்சியில் பேசும்போது கூறினார்.

பினாங்கு ஃப்ளெக்ஸ் நிறுவன நிர்வாக பிரிவு துணைத் தலைவர் பி. விஸ்வநாதன்; மாநில வனத்துறை இயக்குநர் முஹம்மது எஷார் யூசூர் மற்றும் தொழிற்சாலையின் நிர்வாக குழுவினர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியை ஏற்று நடத்தும், ஃப்ளெக்ஸ் நிறுவனம் பினாங்கு மாநில அரசு நிர்வாகத்தின்  ஈடுபாட்டிற்கும் பல ஆண்டுகளாக வழங்கப்பட்ட வலுவான ஆதரவிற்கும் ரோசாலி தனது  பாராட்டையும் தெரிவித்தார்.

“முன்னதாக, ஃப்ளெக்ஸ் நிறுவனம் பினாங்கு எம்.பி.எஸ்.பி உடன் நிலையான சமூக விருதளிப்பு விழா; சுத்தமான வீட்டு சுற்றுப்புற போட்டி மற்றும் செபராங் பிறை மறுசுழற்சி மற்றும் நதி சுத்தம் செய்யும் திட்டங்கள் போன்ற பல நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.

“பினாங்கு, ஃப்ளெக்ஸ் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பூமி தினக் கொண்டாட்டத்தை  வெற்றிகரமாக ஏற்ரு நடத்துவதில்  உறுதியாக உள்ளனர், மேலும் பூமியின் பசுமை மற்றும் சுற்றுச்சூழல் நல்வாழ்வை விரும்பு நிறுவனம் ப ஊழியர்களின் உணர்வை மறைமுகமாக பிரதிபலிக்கிறார்கள், ”என்று மேயர் ரோசாலி தெரிவித்தார்.