img 20261122 wa0041 Chow posing with a boy during the event.

 

பிறை – பினாங்கு மாநில அரசின் செயல்பாடுகள் மீதான மக்களின் ஒட்டுமொத்த திருப்தி நிலை 70.8 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது. இதில் இந்திய சமூகத்தினர் மிக அதிகபட்சமாக 82 விழுக்காடு திருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மலாய் சமூகத்தினர் 74 விழுக்காடும், சீன சமூகத்தினர் 66 விழுக்காடும் பதிவாகியுள்ளனர்.

பினாங்கு முதலமைச்சர் சாவ் கொன் இயோவ் கூறுகையில், பினாங்கு இன்ஸ்டிடியூட் இவ்வாண்டு நடத்திய ‘மக்கள் திருப்தி ஆய்வு’ (Penang Satisfaction Survey) மூலம் இந்தத் தகவல்கள் பெறப்பட்டதாகவும், மாநில மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மொத்தம் 1,686 பேர் இவ்வாய்வில் பங்கேற்றதாகவும் தெரிவித்தார்.

 

மேலும், நிதி, பொருளாதார மேம்பாடு மற்றும் நிலம், தொடர்புத்துறை ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர், மத்திய அரசின் செயல்பாடுகள் மீதான ஒட்டுமொத்த திருப்தி நிலை 59.6 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது என்றார். இதில் மலாய் சமூகத்தினர் 67 விழுக்காடும், இந்திய சமூகத்தினர் 62 விழுக்காடும், சீன சமூகத்தினர் 51 விழுக்காடும் திருப்தி தெரிவித்துள்ளனர்.

“பினாங்கு மாநிலத்தில் வாழும் சீன சமூகத்தினரின் கருத்துகளுக்கு நாம் அனைவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஏனெனில், மாநில அரசின் செயல்பாடுகள் மீதான அவர்களின் திருப்தி நிலை 66 விழுக்காடாகவும், மத்திய அரசின் மீதான திருப்தி நிலை 51 விழுக்காடாகவும் உள்ளது.

“மலாய் சமூகத்தினரைப் பொறுத்தவரை, மாநில அரசின் மீதான திருப்தி 74 விழுக்காடாகவும், மத்திய அரசின் மீதான திருப்தி 67 விழுக்காடாகவும் பதிவாகியுள்ளது.

 

“அதேவேளையில், இந்திய சமூகத்தினரிடையே மாநில அரசின் மீதான திருப்தி 82 விழுக்காடாகவும், மத்திய அரசின் மீதான திருப்தி 62 விழுக்காடாகவும் உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

பினாங்கு மாநில ஜனநாயகச் செயல் கட்சியின் 2026ஆம் ஆண்டு தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் இன்று உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைய தலைமுறையினரிடையே மாநில அரசுக்கு 86 விழுக்காடும், மத்திய அரசுக்கு 82 விழுக்காடும் ஆதரவு காணப்படுவதாக ஆய்வு காட்டுவதாக கொன் இயோவ் மேலும் விவரித்தார்.

அதேவேளையில், 60 முதல் 74 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்களிடையே மாநில அரசுக்கு 72 விழுக்காடு திருப்தி காணப்பட்டாலும், மத்திய அரசின் மீதான திருப்தி 43 விழுக்காடாக மட்டுமே பதிவாகியுள்ளது என்றார்.

இதனையடுத்து, அடுத்த பொதுத்தேர்தலில் மாநில அரசாங்கம் மீண்டும் வெற்றி பெறுவதை உறுதிசெய்யும் வகையில், கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படுவதுடன், போக்குவரத்து நெரிசல், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள், நீர் விநியோகம் போன்ற அன்றாடப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் சேவைகளின் தரத்தையும் மேம்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

“முதலமைச்சராக எனது செயல்பாடுகள் எவ்வளவு மோசமாக இருந்தாலும், நானும் எனது குழுவினரும் அடுத்த தேர்தலில் பினாங்கு மாநில அரசாங்கம் தோல்வியடைவதை அனுமதிக்க மாட்டோம் என உறுதியாகக் கூறுகிறேன்.

“எனினும், நமக்கு இன்னும் இருக்கும் கால அவகாசத்தைப் பயன்படுத்தி, கடுமையாக உழைத்து, ஒன்றிணைந்து செயல்பட்டு, போராட்ட உணர்வை மேலும் வலுப்படுத்த வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

முன்னாள் பினாங்கு முதலமைச்சரும், பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், பி.கே.ஆர் இளைஞர் பிரிவான கெஅடிலான் இளைஞர் அணி(AMK) முன்னதாக முன்வைத்த திறந்த பரிந்துரைக்குப் பதிலளிக்கும் வகையிலேயே தனது கருத்தைத் தெரிவித்தார்.

“எனது நண்பர் குமரேசன் சார்ந்த பி.கே.ஆர் இளைஞர் பிரிவின் ஒரு கருத்து எனது கவனத்தை ஈர்த்தது. எதிர்வரும் பொதுத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணிக் கட்சிகள் தத்தமது கட்சிச் சின்னங்களைப் பயன்படுத்திப் போட்டியிடலாம் என்று அவர் பரிந்துரைத்திருந்தார்.

“இது பி.கே.ஆர் வெளிப்படையாக முன்வைத்துள்ள ஒரு பரிந்துரையாகும். இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே; கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்தல்ல. இருப்பினும், பி.கே.ஆர் அவ்வாறு விரும்பினால், எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐ.செ.க தனது ராக்கெட் சின்னத்தைப் பயன்படுத்திப் போட்டியிடத் தயாராக உள்ளது,” என்றார்.

இந்நிகழ்ச்சியில் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர், ஸ்டீவன் சிம் சீ கியோங்; வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ; ஐ.செ.க மாநிலத் துணைத் தலைவரும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம்கர்பால் சிங் ஆகியோரும் உரையாற்றினர்.

பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர், லிம் ஹுய் யிங் உள்ளிட்ட மா8d2b7db6 dda9 4243 bb55 054cfabaf65dநில மக்கள் பிரதிநிதிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.